பிரபல பாலிவுட் நடிகை மீனாட்சி தாபா என்பவர் 2012 ஆம் ஆண்டு அமித், பீர்த்தி என்ற இரு நபர்களால் கொல்லப்பட்டார். தற்போது இவர்கள் இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது மும்பை குற்றவியல் நீதி மன்றம்.இந்தி நடிகையான இவர் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த “404” , “ஷிஹர்” போன்ற படங்களில் நடித்தவர். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் இந்தி துணை நடிகர்களான அமித், பீர்த்தி என்பவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

பாலிவுட் நடிகையான மீனாட்சிக்கும், அமித், பீர்த்தியுடன் சில ஆண்டுகளாக நட்பு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நடிகை மீனாட்சி தான் ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் தனக்கு பணம் ஒரு விஷயமே இல்லை என்றும் கூறியுள்ளார். இதனால் அவரை பணத்திற்காக அமித், பீர்த்தி இருவரும் சேர்ந்து கடத்தியுள்ளனர்.

பின்னர் நடிகை மீனாட்சியின் பெற்றோர்களுக்கு போன் செய்து 15 லட்ச ரூபாய் பணத்தை கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் 60,000 ரூபாய் மட்டுமே கொடுத்ததால் ஆத்திரமடைந்த இருவரும் மீனாட்சியின் கழுத்தை அறுத்து அவரது உடலை ஒரு கிணட்றில் வீசியுள்ளனர்.

Advertisement

Advertisement

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு சமீபத்தில் மும்பை குற்றவியல் நீதிமன்றதில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடியில் குற்றவாளிகள் இருவரும் குற்றம் செய்தது உறுதியானது. மேலும், இவர்களது தண்டனை குறித்து வரும் மே 10 தேதி அறிவிக்கப்படும் என்று மும்பை நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement