தாவணி போட்ட தீபாவளில செஞ்சி இருந்தா பேமஸ் ஆகி இருக்கலாம் - மீரா ஜாஸ்மினின் போட்டோ ஷூட்டை கேலி செய்யும் ரசிகர்கள்.

By Arun · 20/6/2023

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு பல்வேறு நடிகைகள் வந்து கொடி கட்டி பறந்து இருக்கிறார்கள். நயன்தாரா துவங்கி சாய் பல்லவி வரை அனைவரும் மலையாள சினிமாவில் இருந்து வந்தவர்கள். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின். மீரா ஜாஸ்மின் கேரளாவில் 1982 ஆம் ஆண்டு திருவல்லாவில் பிறந்தவர். இவருடைய முழு பெயர் ஜாஸ்மின் மேரி ஜோசப். நடிகை மீரா ஜாஸ்மின் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது தனது ஊரான திருவல்லாவில் மலையாள படத்தின் சூட்டிங் நடந்த வந்தது.

அதனை பார்க்க மீராவும் அவரது நண்பர்களும் வந்தார்கள். அங்கு இருந்த இயக்குனர் மீரா ஜாஸ்மினின் நடவடிக்கைகளை பார்த்து தன்னுடைய அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறாயா என கேட்டுள்ளார். பள்ளியில் கூட ஸ்டேஜில் ஏறாத மீரா ஜாஸ்மினுக்கு அந்த வாய்ப்பு அதிர்ச்சியாக இருந்தது. சரி என்று சொல்லி 2001 ஆம் ஆண்டு வெளியான சூத்ரதாரன் என்ற படத்தில் நடித்து சினிமா துறைக்கு அறிமுகமானார் மீரா.

90ஸ் ரசிகர்களின் ஜெனிலியா :

பின் சாக்லேட் பாய் மாதவன் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் தான் மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தின் மூலம் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டார் மீரா ஜாஸ்மின். அதன் பின்னர் சினிமா துறையில் மீரா ஜாஸ்மினுக்கு தொட்டதெல்லாம் பொன்னானது. புதிய கீதை, ஆஞ்சநேயா, மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, மெர்குரிப் பூக்கள், பரட்டை என்ற அழகுசுந்தரம் என பல படங்களில் நடித்தார்.

View this post on Instagram

A post shared by Meera Jasmine (@meerajasmine)

மீரா ஜாஸ்மினின் திருமண வாழ்க்கை :

அதுமட்டுமல்லாம் தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் ஆகிய இரண்டு ஹீரோக்களுடன் நடித்த பெருமையும் இவருக்கு இருக்கிறது.இவர் இதுவரை தமிழ் மற்றும் மலையாளத்தில் 50க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் 2008ல் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான மெண்டலின் ராஜேஷ் என்பவரை மீரா ஜாஸ்மின் திருமணம் செய்துகொள்வதாக இருந்தது.

உடல் எடை குறைப்பு :

ஆனால், கடந்த 2014 ஆம் ஆண்டு தனது 32 வயதில் மீரா ஜாஸ்மின் சாப்டவேர் இன்ஜினீயர் அனில் ஜான் டைட்டசை திருமண செய்துகொண்டு துபாயில் செட்டில் ஆகிவிட்டார். பின்னர் 2016 ஆம் ஆண்டு விவாகரத்தும் பெற்றார். அதன் பின்னர் தொடர்ந்து நடித்து வந்த மீரா உடல் எடை கூடியதால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.திருமணத்திற்கு பிறகு மீரா ஜாஸ்மின் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்தார். அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியாவில் கூட மீரா ஜாஸ்மின் தலை காட்டவே இல்லை.

முதல் முறையாக கவர்ச்சி போஸ் :

சில வருடங்களுக்கு முன் இவர் பருமனாக இருக்கும் புகைப்படம் மட்டும் ஒன்று வெளியாகி இருந்தது. பின் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு பிறகு தற்போது இவர் படு ஸ்லிம்மாக மாறி இருக்கிறார். ஸ்லிம்மான மீரா ஜாஸ்மின் அடிக்கடி தன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீப நாட்களாக பல விதமான போட்டோ ஷூட்களை நடத்தி வரும் இவர் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கேலி செய்யும் ரசிகர்கள் :

அந்த வகையில் சமீபத்தில் இவர் படு கவர்ச்சியான உடை அணிந்து போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருந்தார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்து இருந்தார். இதனை கண்ட பெரும்பாலான ரசிகர்கள் 41 வயதில் இதெல்லாம் தேவையா ? தற்போது இப்படி எல்லாம் காட்டி என்ன பலன் ? தாவணி போட்ட தீபாவளில காட்டி இருந்தா பேமஸ் ஆகி இருக்கலாம் என்றெல்லாம் கமண்ட் செய்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full