ஷெரின் மீது அடுக்கடுக்காக பொய்களை சொன்ன மீரா.! கடுப்பான ஷெரின்.! டெலீட் செய்யப்பட்ட காட்சிகள்.!

By ·

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஆரம்பத்திலிருந்தே வனிதாவிற்கு பிறகு சாக்க்ஷி தான் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்ட்டார். அதற்கு ஏற்றார் போல சாக்க்ஷியும் இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றார். எனவே, இந்த வாரம் சாக்க்ஷியை வெளியேற்ற ரசிகர்கள் மும்மரமாக வாக்களித்தனர்.

ஆனால், கடந்த மூன்று நாட்களாக ரசிகர்களின் போக்கஸ் முழுக்க மீரா பக்கம் தான் திரும்பியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்கின் போது அனைவர் மீதும் மீரா பழி போட்டு வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சேரன் மீது குறை சொன்ன மீரா, நேற்று ஷெரின் சொல்லாததை எல்லாம் சொல்லியுள்ளார்.

இதையும் பாருங்க : இந்த வாரம் வெளியேறியது இவர் தான்.! அதிகாரபூர்வ தகவல்.! என்னா ஒரு ட்விஸ்ட்.! 

மீரா மற்றும் சாக்க்ஷி இருவரும் சிறையில் இருந்த போது மீரா சொடுக்கு போட்டு பேசியதால் ஷெரின் 'கையை முறிச்சிவிடுவேன்' என்று கூறியதாக மீரா நேற்று கூறியுள்ளார். ஆனால், உண்மையில் ஷெரின் அப்படி குறிப்பிடவே இல்லை என்பது தான் உண்மை.

https://twitter.com/AwwHacker/status/1154968194957770753

அதே போல நேற்றய நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்கில் யாருடைய கதாபாத்திரம் சுவாரசியமாக இல்லை என்று கேட்கப்பதற்கு மீரா, ஷெரின் மற்றும் சாக்க்ஷியின் பெயரை சொன்னார். அதற்கு அவர் சொன்ன காரணத்தால் கடுப்பான ஷெரின், மீராவிடம் நான் 25 படங்களில் நடித்துள்ளேன் எனக்கு நீங்கள் நடிப்பு சொல்லித்தர தேவை இல்லை என்று கூறியிருந்தார்.

ஆனால், இதுகுறித்து சாண்டி மற்றும் கவினிடம் பேசியுள்ள மீரா, ஷெரின் 25 படங்களில் நடித்துள்ளதாகவும், அவர் தேசிய விருதெல்லாம் வாங்கியவர் என்று கூறியதாகவும் சொன்னார் மீரா. இதனை கேட்டுக்கொண்டிருந்த ஷெரின், நான் விருதுகளை வாங்கியதாக தான் சொன்னேன் ஆனால், தேசிய விருது வாங்கியதாக சொல்லவில்லை என்றார். ஆனாலும், மீரா அதனை ஏற்றுக்கொள்ளவே இல்லை.

https://twitter.com/cinesamugam/status/1155005042383970305

இந்த சீசன் ஆரம்பத்திலிருந்தே வனிதாவிற்கு பிறகு சாக்க்ஷி தான் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்ட்டார். அதற்கு ஏற்றார் போல சாக்க்ஷியும் இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றார். எனவே, இந்த வாரம் சாக்க்ஷியை வெளியேற்ற ரசிகர்கள் மும்மரமாக வாக்களித்தனர்.

கடந்த வியாழக்கிழமை வரை சாக்க்ஷிக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் வந்திருந்தன. ஆனால், நேற்று ஒரு நாள் மட்டும் சாக்க்ஷிக்கு அதிகப்படியான வாக்குகள் விழுந்தன. இதற்க்கு முக்கிய காரணமே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீரா, சேரன் தன்னை தப்பாக தொட்டார் என்று குற்றம் சாட்டியதால் தான்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full