ஸ்கிறீன் டெஸ்ட் வரை சென்று பேட்ட படத்தின் த்ரிஷா கதாபாத்திர வாய்ப்பை இழந்த நடிகை.!

By Rajkumar · 5/1/2019

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட திரைப்படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரன் மற்றும் த்ரிஷா நடித்துள்ளனர்.

ஆனால், இந்த படத்தில் கதாநாயகியாகும் வாய்ப்பு நூலிழையில் தவறியது என்று புலம்பியுள்ளார் நடிகை மீரா மிதுன்.
சூர்யா நடிப்பில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மீரா மிதுன். அதற்கு முன்பே '8 தோட்டாக்கள்' படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த இவர், இந்த படத்தின் மூலம் இன்னும் அதிகம் கவனிக்கப்பட்டார்.

8 தோட்டாக்கள் படத்தில் கொஞ்சம் நெகடிவ் சாயல் கலந்த ஒரு கேரக்டரில் நடித்த இவரைத்தேடி தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. மீரா மிதுனின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், அடுத்தடுத்து தேடி வந்த பல பட வாய்ப்புகள் இவருக்கு திருப்திகரமாக இல்லை. அதனால் தற்போது செலக்டிவாக சில படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சூப்பர்ஸ்டார் ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் நடிப்பதற்காக ஆடிஷனுக்கு அழைக்கப்பட்ட மீரா மிதுன், லுக் டெஸ்ட், ஸ்கிரீன் டெஸ்ட் வரை சென்றுவிட்டார். ஆனால் ஏதோ சில காரணங்களால் அந்த வாய்ப்பு அவருக்கு கைகூடாமல் போய்விட்டது. அவருக்குப் பதிலாக பின்னர் அந்த கேரக்டரில் நடித்தவர் த்ரிஷா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full