முதல் நாளே ஜெயிலர் வசூலை முறியடித்த லியோ - ஷேவிங் பிளேடை நீட்டிய தொகுப்பாளர். மீசை ராஜேந்திரனின் பதில்

By Rajkumar · 24/10/2023

விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த வாரிசு மற்றும் பீஸ்ட் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்ததாக கூறப்படுகிறது. தற்போது விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள்.

https://twitter.com/7screenstudio/status/1715344740659421368

இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. அனைத்து திரையரங்களிலும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை மட்டுமே காட்சிகள் திரையிடப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இன்று அனைவரும் எதிர்பார்த்த லியோ படம் பிரம்மாண்டமாக வெளியாகிஇருந்தது. தமிழகத்தில் மட்டும் 9 மணிக்கு வெளியாகி இருந்தது. பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் 4 மணி மற்றும் 5 மணிக்கு திரைப்படம் வெளியாகி இருந்தது.

படம் குறித்த தகவல்:

ரசிகர்கள் மத்தியில் லியோ படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் படத்தில் முதல் பாதியே தூள் கிளப்புகிறது என்றும் அடுத்த பாதையெல்லாம் வேற லெவல் என்றும் ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் தெறிக்க விட்டு வருகின்றனர். தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த செய்திகள் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்நிலையில் உலக அளவில் முதல் நாள் லியோ படம் 148 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.

https://twitter.com/Kettavan__Memes/status/1715642388146974911

உலக அளவில் முதல் நாள் வசூல்:

இதற்கு முன்பு உலக அளவில் முதல் நாள் வசூலில்
பாகுபலி 2- 201 கோடி
RRR - 190 கோடி
கே ஜி எஃப் 2 -162 கோடி
ஜவான் -127 கோடி வசூல் செய்து இருந்தது.
ஜெயிலர் - 72 கோடி

https://www.youtube.com/watch?v=JKPwsDwNokg

இப்படி முதல் நாளே உலகளவில் ஜெயிலர் படத்தின் வசூலை லியோ படம் முந்திய நிலையில் பலரும் மீசை ராஜேந்திரனை வச்சி செய்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம், லியோ படம் வெளியாகும் முன்னர் மீசை ராஜேந்திரன் அளித்த பேட்டியில் லியோ படம் மட்டும் ஜெயிலர் அளவிற்கு லியோ திரைப்படம் வசூல் செய்தால் நான் என்னுடைய மீசையை எடுக்கிறேன். லியோ 300 கோடிக்கு மேல் தாண்டாது. ஒரு லட்சம் பந்தயம் வச்சிக்கலாம் என்று கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் முதல் நாளே ஜெயிலர் படத்தின் வசூலை முறியடித்ததோடு 400கோடிக்கு மேல் லியோ படம் வசூல் செய்துள்ளது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மீசை ராஜேந்திரனிடம் லியோ படம் முதல் நாளே ஜெயிலரை முந்திவிட்டது இப்போ மீசை எடுக்கிறீர்களா என்று தொகுப்பாளர் shaving bladeஐ காட்டினார். இதற்கு பதில் அளித்த மீசை ராஜேந்திரன் நான் 2.0 வசூலையும் சேர்த்து முந்தினால் தான் மீசை எடுக்கிறேன் என்று சொன்னேன். மேலும் முதல் நாளில் லியோ படம் இத்தனை கோடி வசூல் செய்து இருக்கிறது என்று சொல்வது எல்லாம் பொய் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full