லியோ படம் பாத்துட்டு வெளியில் வரும் போது - மீசையை எடுக்க சொன்ன விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த மீசை ராஜேந்திரன்.

By Rajkumar · 21/10/2023

லியோ படத்தை பார்த்துவிட்டு மீசை ராஜேந்தரின் அளித்திருக்கும் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபீசிலும் இடம் பெறும். அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த பீஸ்ட் மற்றும் வாரிசு படம் சரியாக ஓடவில்லை.

தற்போது விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். ரசிகர்கள் மத்தியில் லியோ படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் முதல் நாளே 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

உலக அளவில் முதல் நாள் வசூல்:

இதற்கு முன்பு உலக அளவில் முதல் நாள் வசூலில்
பாகுபலி 2- 201 கோடி
RRR - 190 கோடி
கே ஜி எஃப் 2 -162 கோடி
ஜவான் -127 கோடி வசூல் செய்து இருந்தது.
ஜெயிலர் - 72 கோடி

View this post on Instagram

A post shared by Thalapathy Sanjay (@vijaytrends_offical)

முதல் நாளே ஜெயிலர் படத்தின் வசூலை மிஞ்சிய நிலையில் மீசை ராஜேந்திரன் தனது மீசையை எடுக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக விஜய் மற்றும் ரஜினிக்கு இடையை சூப்பர் ஸ்டார் யார் என்ற போட்டி சென்று கொண்டு தான் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மீசை ராஜேந்திரன் ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் பட்டதற்கு விஜய் ஆசைப்படலாமா.

கடந்த வருடங்களில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பீஸ்ட், சர்க்கார் போன்ற படங்கள் அதிக வசூல் என்று கூறப்பட்ட நிலையில் அவை 200 கோடி வரை வசூல் செய்தன நிலையில் அதை தவிர பெரிய சாதனையை விஜய் செய்யவில்லை. ரஜினிகாந்தின் 800 கோடி வசூலை ஏற்படுத்திவிட்டு விஜய் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி பேசலாம். என்றுமே ரஜினி ஒருவர்தான் எங்களுக்கு சூப்பர் ஸ்டார்.

https://www.youtube.com/watch?v=0QeaHZEqPGc&t=1435s

லியோ படம் மட்டும் ஜெயிலர் அளவிற்கு லியோ திரைப்படம் வசூல் செய்தால் நான் என்னுடைய மீசையை எடுக்கிறேன். லியோ 300 கோடிக்கு மேல் தாண்டாது. ஒரு லட்சம் பந்தயம் வச்சிக்கலாம் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மீசை ராஜேந்திரன், நான் லியோ படத்தை பார்க்கும் போது அங்கே இருந்தவர்கள் 1000 கோடி 2000 கோடினு எல்லாம் கத்துனாங்க. ஆனால், லியோ படம் கண்டிப்பாக 1000 கொடியாய் நெருங்காது. லியோ படம் 800 கோடி வசூல் ஆகிவிட்டது என்று சொல்லட்டும் விஜய் சாரே என் மீசையை வந்து எடுக்கட்டும் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full