மேகா ஆகாஷின் வருங்கால கணவர் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் பிரபலத்தின் மகனாம்- யாருன்னு நீங்களே பாருங்க

By subhashini · 26/8/2024

நடிகை மேகா ஆகாஷின் வருங்கால கணவர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது உள்ள பல இளம் நடிகைகளில் மேகா ஆகாஷ் ஒருவர். இவர் இளம் ரசிகர்கள் கூட்டம் கொண்டாடும் ஒரு நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் 'லை’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆனார். அதற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘பேட்ட’ என்ற படத்தின் மூலம் மேகா தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதற்குப் பிறகு, நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால், அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரியளவு வரவேற்பை பெறவில்லை. பின், தனுஷ் நடிப்பில் வெளியான ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ என்ற படத்தில் மேகா நடித்திருந்தார். அந்தப் படம் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை என்றாலும், அந்த படத்தில் இடம்பெற்ற ‘மறுவார்த்தை பேசாதே’ என்ற பாடல் பயங்கரமாக ஹிட் ஆனது.

மேகா ஆகாஷ் திரைப்பயணம்:

இந்த பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடியிருந்தார். பின்னர் இடையில் பட வாய்ப்பு இல்லாமல் இருந்த இவர் அசோக் செல்வனுடன் சேர்ந்து ‘சபாநாயகன்’ படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு சந்தானம் நடிப்பில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற திரைப்படத்தில் மேகா நடித்திருந்தார். கடைசியாக, இவர் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

மேகா குறித்த தகவல்:

இப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதை தொடர்ந்து இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஒரு சில ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். இப்படி அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்தாலும், தனது திறமையை நிரூபிக்கும் வகையில் இவருக்கு எந்த படங்களும் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் தற்போது நடிகை மேகா ஆகாஷ் திருமணத்திற்கு தயாராகி விட்டார் என்ற செய்தி தான் வைரல் ஆகியுள்ளது.

மேகா ஆகாஷ் நிச்சயதார்த்தம்:

அதாவது, இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலர் சாய் விஷ்ணுவை கரம் பிடிக்க உள்ளார். அவர்களின் திருமணத்திற்கு குடும்பத்தார் சம்மதம் சொன்னதனால் மேகா ஆகாஷ் மற்றும் சாய் விஷ்ணு நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடந்து முடிந்தது. இவர்களின் நிச்சயதார்த்தம் கேரளாவில் சிம்பிளாக நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். இவர்களின் நிச்சயதார்த்தம் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பிரபலங்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.

மேகா ஆகாஷ் வருங்கால கணவர் குறித்த தகவல்:

தற்போது இவருடைய வருங்கால கணவர் யார்? என்றும் இணையத்தில் தேடி வந்தார்கள். இந்த நிலையில் நடிகை மேகா ஆகாஷின் வருங்கால கணவர் குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. இவர் காதல் திருமணம் செய்யக் கூடிய நபர் வேற யாரும் இல்லை, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி திருநாவுக்கரசின் மகன் சாய் விஷ்ணு தான். தற்போது மேகா அவர்கள் சாய் விஷ்ணுவுடன் சேர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று திருமண அழைப்பு கொடுத்து இருக்கிறார். திருமண தேதி குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full