தன் கணவரின் ஆசையை நிறைவேற்றிய மேக்னா ராஜ் - ரஜினி செய்த சம்பவம் - வைரலாகும் வீடியோ
தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் மேக்னா ராஜ். இவர் 2009ம் ஆண்டு வெளிவந்து இருந்த கன்னட படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து இருந்தார். பின் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. இதனிடையே நடிகை மேக்னா ராஜ் அவர்கள் நீண்ட காலமாக கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து இருந்தார்.
பின் இவர்கள் இருவரும் 2018-ம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார்கள். திருமணத்துக்குப் பிறகும் நடிகை மேக்னா ராஜ் தொடர்ச்சியாக படங்களில் நடித்து இருந்தார். பின் கடந்த 2020 ஆம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை. அதுமட்டும் இல்லாமல் அப்போது மேக்னா தன் முதல் குழந்தையை வயிற்றில் மேக்னா கொண்டு இருந்தார்.
மேக்னா ராஜ் குறித்த தகவல்:
தன் முதல் குழந்தையை பார்ப்பதற்குள் சிரஞ்சீவி சர்ஜா உயிரிழந்து விட்டார். சர்ஜாவின் திடீர் மறைவு கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. பின் மேக்னாவிற்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதன் மூலம் இவர் வாழ்க்கையில் சந்தோசம் எட்டி பார்த்தது. அதன் பின் மேக்னா ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மேக்னா அவர்கள் சினிமாவில் நடிக்கிறார்.
மேக்னா ராஜ் கணவர் ஆசை:
தற்போது இவர் தமிழில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் தான் நடிக்கிறார். இந்த படம் ஜூன் மாதம் ரிலீஸ் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு இந்த படத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மேக்னா என்ட்ரி கொடுக்கிறார். இந்த படம் மேக்னா ஒரு கம்பேக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் மேக்னா தன்னுடைய கணவரின் ஆசையை நிறைவேற்றி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினி செய்தது:
அதாவது, மறைந்த மேக்னா கணவர் சிரஞ்சீவி தீவிர ரஜினியின் ரசிகர். அவர் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்று ரொம்பவே ஆசைப்பட்டாராம். ஆனால் அந்த ஆசை நிறைவேற வில்லை. தற்போது மேக்னா, ரஜினியுடன் சேர்ந்து படத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் மேக்னா அவர்கள் தன் கணவர் வைத்திருந்த ரஜினி சிலையில் ரஜினியிடம் ஆட்டோகிராபை வாங்கி இருக்கிறார். இந்த வீடியோவை தன்னுடைய திருமண நாளில் மேக்னா பகிர்ந்திருக்கிறார்.