ரெண்டு குடிகாரனுங்க அட்ராசிட்டி முடியல- மெய்யழகன் படத்தை வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

By subhashini · 28/9/2024

மெய்யழகன் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் கொடுத்து இருக்கும் விமர்சனம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களாக திகழும் அரவிந்த்சாமி- கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மெய்யழகன். இந்த படத்தை 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி,ஜெயராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்து இருக்கிறார்.

மேலும், படத்தில் அரவிந்த்சாமி தன்னுடைய சிறுவயதிலேயே சொத்து பிரச்சனையால் சொந்த ஊரை விட்டு குடும்பத்துடன் சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். பின் 22 வருடங்கள் கழித்து தன்னுடைய தங்கையின் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய கட்டாயம் வந்தது. அப்போதுதான் அவர் கார்த்தியை சந்திக்கிறார். கார்த்தி யார் என்று அரவிந்த்சாமிக்கு தெரியவில்லை. இருந்தாலுமே கார்த்தி காண்பிக்கும் அன்பினால் அவர் ரொம்ப உருகி விடுகிறார். பின் இருவரும் குடித்துவிட்டு செய்யும் அட்ராசிட்டிக்கு அளவே இல்லை.

மெய்யழகன் படம்:

கடைசியில் கார்த்திக் யார் என்பதை தெரிந்து கொள்ள அரவிந்த்சாமி முயற்சிக்கிறார். கார்த்தி யார் என்று அரவிந்த்சாமி தெரிந்து கொண்டாரா? கார்த்திக்கும் அரவிந்த்சாமிக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் மெய்யழகன் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் கொடுத்த விமர்சனத்தில், இது முழுக்க முழுக்க இயக்குனர் படம். இயக்குனர், என்ன எடுக்க வேண்டும் என்று நினைத்தாரோ அதை அப்படியே செய்திருக்கிறார். 'அத்தான் அத்தான்' என்று அன்பு தொல்லை கொடுக்கும் நபரை தெரிந்து கொள்ள அரவிந்த்சாமி காட்டி இருக்கும் முயற்சி எல்லாம் பார்க்க நன்றாக இருக்கிறது.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்:

முதல் பாதி அருமையாக இருக்கிறது. ஆனால், படத்துடைய பலவீனமே இரண்டாம் பாதி தான். இரண்டாம் பாதியில், இவருடைய மனதை எப்படி மாத்துகிறேன் என்று நெஞ்சை நக்கும் காட்சிகள் எல்லாம் ரொம்ப நீள நீளமாக வைத்திருக்கிறார். குறிப்பாக, காளமாடு, சைக்கிள், கரிகாலன் என்று குடித்துவிட்டு ஒவ்வொரு கதை சொல்லும் போது ரொம்ப போர் அடிக்க வைக்கும் வகையில் இருக்கிறது. இந்த உலகத்திலேயே ரொம்ப கஷ்டமான விஷயம், இரண்டு குடிகாரன்கள் குடித்துவிட்டு பேசுவதை குடிக்காதவன் கேட்பதுதான். அந்த கஷ்டத்தை உங்களில் எத்தனை பேர் அனுபவித்தீர்கள் என்று தெரியாது. ஆனால், இந்த படத்தை பார்த்தால் கண்டிப்பாக அனுபவித்து விடுவீர்கள்.

https://youtu.be/svaGGkzvhW4?si=AC5DouxwVDyq8HE2

படத்தின் கதை:

கிளைமாக்ஸ் ஆவது நன்றாக இருக்கும் என்று பார்த்தால் அதுவும் போதும் போதும் டா, எப்படா படம் முடியும் என்று யோசிக்கிற அளவிற்கு கிளைமாக்ஸ் இயக்குனர் வைத்திருக்கிறார். முதல் பாதியில் கார்த்தியோட பெயரை தெரிஞ்சுக்க அரவிந்த்சாமி பண்ண விஷயம் எல்லாம் நன்றாக இருந்தது. ஆனால், இரண்டாம் பாதியில், உன் பேர என்ன சொல்லு? என்று சொல்லும் போது கார்த்தி நிறைய குழு கொடுக்கிறார். அதுதான் கடுப்படிக்கிறது. இந்த படத்திற்கு டைட்டில் மெய்யழகன் என்று போட்டு, கார்த்தி உடைய அண்ணன் மதியழகன் என்று சொல்லியும் அவருடைய பெயரை கண்டுபிடிக்க அரவிந்த்சாமி செய்ததெல்லாம் ரொம்ப வன்முறையா இருக்கு.

படம் குறித்து சொன்னது:

இந்த படம் ஐடியா நல்லா இருக்கு. உலகம் முழுவதும் இந்த மாதிரி நிறைய படங்கள் வந்திருக்கிறது. தமிழில் கூட அன்பே சிவம் என்ற படம் வந்தது. படத்தில் இருவருடைய மன மாற்றத்தை பற்றி தான் பேசி இருப்பார்கள். இந்த படத்தில் இரண்டாம் பாதியை சரியாக காண்பித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். மனமாற்றம் என்று அவர்கள் தான் சொல்லி இருக்கிறார்கள் தவிர படத்தைப் பார்த்த நமக்கு எதுவும் ஏற்படவில்லை. மொத்தத்தில் கலர்ஃபுல்லா படம் பார்க்க நினைப்பவர்களுக்கு இது ஒரு மொக்கை தான், வித்தியாசமான படம் பார்ப்பவர்களுக்கு இந்த படம் பிடிக்கும் என்று கூறுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full