மெர்சல் பட குட்டி சிறுவன் பிறந்தநாளுக்கு தளபதி கொடுத்த பரிசு.! வைரல் புகைப்படம்.!
இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு முன்பாக அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார் விஜய். அதில் கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லீ இயக்கி இளையதளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து பட்டையை கிளப்பிய படம் மெர்சல்.
படம் மட்டும் மாபெரும் ஹிட் அடித்தது மட்டுமில்லாமல் படம் வெளியாவதற்கு முன்னாலே அப்படத்தின் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது. அதிலும் குறிப்பாக ஆளப்போறான் தமிழன் பாடல் வெளியானதும் அரசியலுக்கு விஜய் வருவாரா என்கிற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும் பாடல் வரிகள் தமிழகம் முழுதும் ஒலிக்கத்தொடங்கின.
இதையும் படியுங்க : கையில் கோசமான தீக்காயம்.! டாப்ஸியின் நிலையை கண்டு உச்சு கொட்டிய ரசிகர்கள்.!
பல முன்னனி நடிகர்கள் இந்தப்படத்தில் பல கேரக்டர்களில் நடித்திருந்தாலும் அப்பா விஜய்க்கு மகன் கேரக்டரில் நடித்து அசத்திய குட்டி விஜய் "அஷாந்த்"தை யாரும் அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது. தனது அழகான சிர்ப்போடு கூடிய திறமையான நடிப்பால் இளம்வயதிலேயே தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக்கொண்ட அஷாந்த் மெர்சல் படம் வெளியானவுடனே வளர்ந்தவுடன் விஜய் போல இருக்க ஆசை என தனது ஆசையை தெரிவித்திருந்தார்.
https://twitter.com/LMKMovieManiac/status/1137667291523440640
படத்தில் அப்பாவியாக கிராமப்புற சிறுவனாக வலம்வந்த அஷாந்த் தற்போது அந்நியன் பட ரெமோ ரேஞ்சில் ஆளே மாறிவிட்டுள்ளார். ஸ்டைலான கட்டிங் மற்றும் அசத்தலான டிரெஸ்ஸிங் என இளம் மாடல் போல காட்சியளிக்கும் அவரது படம் ஒன்று தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகின.
மெர்சல் படத்திற்கு பின்னர் மாஸ்டர் அக்ஷத்தை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை. இந்த நிலையில் மாஸ்டர் அக்ஷத் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக விஜய் ஒரு குட்டி கேமேரா ஒன்றை பரிசளித்துள்ளார்.