'படம் வந்ததுல இருந்து எனக்கு போன் வந்துட்டே இருக்கு' - வலிமை படம் குறித்து மெட்ரோ இயக்குனர் விளக்கம்.

By Ajju · 28/2/2022

வலிமை படத்தை மெட்ரோ படத்தோடு ஒப்பிட்டு வரும் பதிவுகள் தொடர்பாக இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று உள்ளது. அந்த வகையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் சில தினங்களுக்கு முன் ரிலீசாகி இருக்கிறது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார்.

இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக உள்ளார். படத்தில் சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள். இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார். இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது.

வலிமை படம் பற்றிய தகவல்:

இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது தான் படத்தின் கதை. மேலும், படம் முழுவதும் அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. அஜித்துக்கு அடுத்து வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திகேயா மிரட்டியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஆண்களுக்கு இணையாக ஆக்சன் காட்சிகளில் ஹீமா குரேஷி மாஸ் காட்டியிருக்கிறார். மேலும், வலிமை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

வலிமை படத்தின் வசூல்:

கேரளாவில் முதல் நாள் வசூலில் விஜய்யின் மாஸ்டர் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து முந்தி இருக்கிறது வலிமை படம். அதோடு ‘வலிமை’ படத்தை பார்த்து திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர். மேலும், வலிமை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருந்தாலும் சிலர் வலிமை படத்தை குறித்து நெகட்டிவ் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் வலிமை படத்தை மெட்ரோ படத்துடன் ஒப்பிட்டு பல பதிவுகள் வெளியாகி வருகின்றன.

இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் பதிவு:

அது மட்டுமில்லாமல் நடிகர் பயில்வான் ரங்கநாதனும் வலிமை படத்தை சத்யராஜ் நடிப்பில் வெளியான வால்டர் வெற்றிவேல் படத்துடன் ஒப்பிட்டு பல பதிவுகளை போட்டு இருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து மெட்ரோ படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் பலருக்கும் தொலைபேசி வாயிலாக தகவலை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, வலிமை படத்தின் முதல் காட்சியிலிருந்து ஒப்பிட்டு பார்வையுடன் கூடிய தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

அஜித் படத்துக்கு காத்து இருக்கேன்:

இது மிக சிறிய இன்ஸ்பிரேஷனாக மட்டுமே இருக்கலாம். அல்லது தற்செயலாக நடந்து இருக்கலாம். வலிமை படம் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. அதன் மூலம் தமிழ் சினிமா புத்துயிர் பெற்றுள்ளது. ஒரு ரசிகனாக அஜித் சாரின் அடுத்த படத்துக்காக தவிப்புடன் காத்திருக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார். மெட்ரோ படம் 2016 ஆவது ஆண்டில் வெளியாகி இருந்தது. இத்திரைப்படத்தில் சிரீஷ், பாபி சிம்ஹா, சென்ட்ராயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full