அட, வள்ளி திரைப்படத்தில் நடித்த இந்த நடிகர், மெட்டி ஒலி சீரியல் நடிகையின் அண்ணன் தானாம். இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

By Rajkumar · 10/4/2023

ரோஜா சீரியல் நடிகை காயத்ரியின் அண்ணன் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மெட்டி ஒலி சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை காயத்ரி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பார்த்து ரசித்து மகிழ்ந்த சீரியல் என்றால் அது மெட்டி ஒலி தான். அதிலும் ‘அம்மி அம்மி அம்மி மிதித்து என்ற பாடல் இன்றளவும் மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றது.

2002 ஆம் ஆண்டு சன் டிவியில் தான் ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியலை திருமுருகன் அவர்கள் இயக்கினார். ஆண்டுகள் பல கடந்தாலும் தற்போது வரை மக்கள் மெட்டி ஒலி சீரியலை பற்றி பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். மேலும், இந்த சீரியலில் ‘சரோ’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த காயத்ரியை யாராலும் மறக்க முடியாது. சுரேஷ் மேனன் இயக்கிய ‘பாசமலர்’ என்ற படத்தில் தான் முதன் முதலாக தமிழ் சினிமாவில் காயத்ரி அறிமுகமானார்.

அதில் இவர் அஜித்துக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். பின் தல – தளபதி இணைந்து நடித்த ‘ராஜாவின் பார்வையிலேயே’ என்ற படத்தில் அஜித்தின் காதலியாக நடித்து இருந்தார். அதன் பின் இவர் சில படங்களில் நடித்தார். பிறகு சினிமாவில் வாய்ப்பு குறைய தொடங்கியவுடன் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். இவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். இப்படி சீரியலில் காயத்திரி பிசியாக நடித்து இருக்கும் போது கல்யாணம் ஆனது. இவருடைய கணவர் ரவி. இவர் சின்னத்திரை இயக்குனர்.

இவர் பல சீரியல்களை இயக்கி இருக்கிறார். கல்யாணம் ஆன பிறகும் காயத்திரி சீரியலில் நடித்து வருகிறார். அதிலும் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த ரோஜா தொடரில் மாமியார் ஆக நடித்திருந்தார். இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவடைந்தது. தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா என்ற தொடரில் மாமியாராக நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய அண்ணனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார். இது சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இவர்தான் உங்கள் அண்ணாவா! என்ற ஷாக்கில் இருக்கிறார்கள். அவர் வேறு யாரும் இல்லைங்க, நடிகர் சஞ்சய் தான். ரஜினிகாந்த் கதை எழுதி தயாரித்து நடித்திருந்த வள்ளி படத்தில் சஞ்சய் நடித்திருந்தார். அதேபோல் பி வாசு இயக்கத்தில் விஜயகாந்த், மீனா நடித்த சேதுபதி ஐபிஎஸ் படத்திலும் சஞ்சய் நடித்திருந்தார். இப்படி இவர் பல படங்களில் நடித்திருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full