தல - தளபதி நடித்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள மெட்டி ஒலி சீரியல் நடிகை. அட, இவரா ? இதோ வீடியோ.

By Rajkumar · 2/5/2021

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பார்த்து ரசித்து மகிழ்ந்த சீரியல் என்றால் அது மெட்டி ஒலி தான். அதிலும் ‘அம்மி அம்மி அம்மி மிதித்து’ என்ற பாடல் இன்றளவும் மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றது. 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் தான் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியலை திருமுருகன் அவர்கள் இயக்கினார். இந்த சீரியலில் டெல்லி குமார், காவேரி, காயத்திரி, வனஜா, உமா, ரேகா, சேத்தன், நீலிமா ராணி,போஸ் வெங்கட் மற்றும் திருமுருகன் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளார். ஆண்டுகள் பல கடந்தாலும் தற்போது வரை மக்கள் மெட்டி ஒலி சீரியலை பற்றி பேசிக் கொண்டு தான் உள்ளார்கள்.

ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்ற தந்தையும் அவரது குடும்பமும் அதற்குள் நடக்கும் நிகழ்வுகளையும் மையமாக வைத்து தான் மெட்டி ஒலி. இந்த சீரியல் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி இருந்தது. இந்த சீரியல் பட்டி தொட்டி எல்லாம் ஹிட்டானது. மெட்டி ஒலி சீரியலில் நடித்த நடிகர்கள் எல்லோருமே மிகப் பெரிய அளவில் பிரபலமானர் என்று சொல்லலாம். இந்த சீரியலை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க மாட்டார்கள்.

அந்த வகையில் இந்த சீரியலில் 'சரோ' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த காயத்ரியை யாராலும் மறக்க முடியாது. சுரேஷ் மேனன் இயக்கிய 'பாசமலர்' படத்தில் தான் காயத்ரி முதன் முதலாக தமிழ் சினிமாவில் காயத்ரி அறிமுகமானார். அதன் பின்னர் இவர் அஜித்துக்கே ஜோடியாக நடித்துள்ளார். அதுவும் தல - தளபதி இருவரும் ஒன்றாக இணைந்து நடித்த படத்தில்.

https://www.youtube.com/watch?v=kB_9qGaTEVg

அட, உண்மை தான் 1995 ஆம் ஆண்டு விஜய் மற்றும் அஜித் நடிப்பில் வெளியான 'ராஜாவின் பார்வையிலே' படத்தில் இவர் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அஜித்திடுன் நடித்தாலும் இவருக்கு சினிமாவில் சரியான ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இவர் அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்துவிட்டார். இன்றும் சரோவாக மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் காயத்ரி.

behindtalkies AMP · Quick view
View full