27 வாருடங்களுக்கு முன் அஜித்துடன் நடித்த போது எடுத்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் - மெட்டி ஒலி காயத்ரி ஷேரிங்.

By Rajkumar · 1/7/2021

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பார்த்து ரசித்து மகிழ்ந்த சீரியல் என்றால் அது மெட்டி ஒலி தான். அதிலும் ‘அம்மி அம்மி அம்மி மிதித்து’ என்ற பாடல் இன்றளவும் மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றது. 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் தான் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியலை திருமுருகன் அவர்கள் இயக்கினார். இந்த சீரியலில் டெல்லி குமார், காவேரி, காயத்திரி, வனஜா, உமா, ரேகா, சேத்தன், நீலிமா ராணி,போஸ் வெங்கட் மற்றும் திருமுருகன் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளார். ஆண்டுகள் பல கடந்தாலும் தற்போது வரை மக்கள் மெட்டி ஒலி சீரியலை பற்றி பேசிக் கொண்டு தான் உள்ளார்கள்.

ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்ற தந்தையும் அவரது குடும்பமும் அதற்குள் நடக்கும் நிகழ்வுகளையும் மையமாக வைத்து தான் மெட்டி ஒலி. இந்த சீரியல் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி இருந்தது. இந்த சீரியல் பட்டி தொட்டி எல்லாம் ஹிட்டானது. மெட்டி ஒலி சீரியலில் நடித்த நடிகர்கள் எல்லோருமே மிகப் பெரிய அளவில் பிரபலமானர் என்று சொல்லலாம். இந்த சீரியலை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க மாட்டார்கள்.

அந்த வகையில் இந்த சீரியலில் 'சரோ' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த காயத்ரியை யாராலும் மறக்க முடியாது. சுரேஷ் மேனன் இயக்கிய 'பாசமலர்' படத்தில் தான் காயத்ரி முதன் முதலாக தமிழ் சினிமாவில் காயத்ரி அறிமுகமானார். அதன் பின்னர் இவர் அஜித்துக்கே ஜோடியாக நடித்துள்ளார். அதுவும் தல - தளபதி இருவரும் ஒன்றாக இணைந்து நடித்த படத்தில்.அட, உண்மை தான் 1995 ஆம் ஆண்டு விஜய் மற்றும் அஜித் நடிப்பில் வெளியான 'ராஜாவின் பார்வையிலே' படத்தில் இவர் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ராஜாவின் பார்வையிலே படத்தில் காயத்ரி

ஆனால், ராஜாவின் பார்வையிலே படத்திற்கு முன்பாகவே இவர் அஜித்திடம் 'பாசமலர்கள்' என்ற படத்தில் நடித்துள்ளார். அரவிந்த் சாமி, ரேவதி நடித்த இந்த படத்தில் அஜித் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த நிலையில் நடிகை காயத்ரி தனது சமூக வலைத்தள பக்கத்தில், ’பாசமலர்கள்’ படத்தில் நடித்தபோது அஜித் மற்றும் படக்குழுவினர்களுடன் இருந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். 27 வருடங்கள் கழித்து அஜித்துடன் நடித்ததை நடிகை காயத்ரி நினைவுகூர்ந்து இருக்கும் நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full