இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘எம் ஜி ஆர் மகன்’. இந்த படத்தில் சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி ரவி, சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி உட்பட பல சினிமா நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளார்கள். இந்த படம் நகைச்சுவை– அதிரடி கதையில் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அந்தோணி தாசன் இசையமைத்துள்ளார். வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ள இந்த படத்தின் திரைவிமர்சனத்தை பற்றி இங்கு பார்க்கலாம்.

கதைக்களம்:

Advertisement

தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் சத்யராஜ் அவர்கள் வைத்தியராக இருக்கிறார். படத்தில் சத்யராஜுக்கு மகனாக சசிகுமார் நடித்துள்ளார். சத்யராஜ் மருத்துவத்திற்கு பயன்படும் மூலிகை நிறைந்த ஒரு மலையை பழ கருப்பையா என்பவர் விலைக்கு வாங்குகிறார். இதனால் சத்யராஜூக்கும், பழ கருப்பையாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இவர்களுடைய பிரச்சனை கோர்ட், கேசு என்று நீதிமன்றம் வரை செல்கிறது. பின் இந்த வழக்கில் வெற்றி பெறுவதற்காக சத்யராஜ் தனது மகன் சசிகுமாரை வக்கீலுக்கு படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

அதற்காக சத்யராஜ் பல முயற்சிகளை செய்கிறார். ஆனால், சசிகுமார் 12 ஆம் வகுப்பிலேயே அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த சத்யராஜ் தன் மகன் சசிகுமாரை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். பின் இருவருக்கும் இடையே சில சில தகராறுகளும், பிரச்சினைகளும் ஏற்படுகிறது. கடைசியில் அந்த மூலிகை மலையை சத்யராஜ் கைப்பற்றினாரா? இல்லையா? தந்தையும் மகனும் ஒன்று சேர்ந்தார்களா? சசிகுமார் தன் தந்தையின் கனவை நிறைவேற்றினாரா? என்பது தான் படத்தின் மீதி கதை.

Advertisement

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கி இருந்தார். அதே பாணியில் தான் எம்ஜிஆர் மகன் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் பொன்ராம் அரைத்து இருக்கிறார். மேலும், படத்தில் ரசிக்கும் படியான காட்சிகளும், காமெடி சீன்களும் எதுவும் இல்லை என்றே சொல்லலாம். இவர் இதற்கு முன் இயக்கிய படங்களில் எல்லாம் பாராட்டக்குரிய வகையில் காமெடி காட்சிகள் இருந்தது. ஆனால், இந்த படத்தில் ஒன்றுமே இல்லை.

Advertisement

வழக்கம்போல் தந்தைக்கும் மகனுக்கு இடையே நடக்கும் பிரச்சனை, வாக்குவாதம், கடைசியில் தந்தைக்காக மகன் போராடுவது என்று அதே கான்செப்டை தான் கொஞ்சம் கூட மாற்றாமல் இயக்கியிருக்கிறார்.


படத்தில் சசிகுமார்-சமுத்திரக்கனி காம்பினேஷன் அனைவருக்கும் தெரிந்தது தான். படத்தில் தந்தை– மகன் பாச கதையாக இருந்தாலும் அதை கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில் கதையை சென்று கொண்டு இருந்தால் நல்லா இருக்கும் என்று கூறுகிறார்கள்.

பிளஸ்:

படத்தில் நடிகர்கள் தங்களது கொடுத்த கதாபாத்திரங்களில் கனகச்சிதமாக நடித்துள்ளார்கள்.

மருத்துவ மூலிகைச் செடிகளைப் பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது.

அப்பா– மகன் இடையேயான உறவு நன்றாக இருந்தது.

மைனஸ்:

அரைத்த மாவையே திரும்பி திரும்பி அரைத்து இருப்பதால் போர் அடிக்கும் வகையில் இருந்தது.

படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு மாற்றங்களும், காட்சிகளும் இல்லை.

படத்தில் ரசிக்கும் படியான காமெடி சீன்கள் எதுவும் இல்லாததால் படம் பிலப் தான். அ

இயக்குனர் கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும். படத்தில் சொல்லிக் கொள்ளும் படியாக எதுவும் இல்லாததால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றம்.

மொத்தத்தில் ‘எம் ஜி ஆர் மகன்’— ரசிக்கும் படியாக எதுவும் இல்லை.

Advertisement