கேலி செய்த நபர். மியா கலீபா கொடுத்த பதிலால், பதிவையே நீக்கிய நபர். அப்படி என்ன சொன்னார் பாருங்க.

By Rajkumar · 2/5/2020

உலகமெங்கும் தற்போது 'கொரோனா' எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், '144' போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

https://www.instagram.com/p/B-0SsacJCpb/

'கொரோனா' பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. கொரோனா நிவாரண பணிகளுக்காக பல திரையுலக பிரபலங்கள் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றனர். இந்த லாக் டவுன் டைமில் பல திரையுலக பிரபலங்கள் ஷூட்டிங் எதுவும் இல்லாததால், வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவு செய்து பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.

திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளமான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல விதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை ஷேர் செய்த வண்ணமுள்ளனர். அதில் பாட்டு பாடுவது, சமைத்து கொண்டிருப்பது, ஜிம்மில் வொர்க்கவுட் செய்வது, பாடலுக்கு நடனமாடுவது, டிக் டாக் செய்வது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் வெளியாகி வருகின்றது.

இந்நிலையில், இந்த லாக் டவுன் டைமில் பிரபல ஆபாச பட நடிகை மியா கலிஃபா ஷேரிட்ட ஒரு புகைப்படம் தொடர்பாக ஒரு செய்தி வெளி வந்திருக்கிறது. பல ஆபாச படங்களில் நடித்திருக்கும் நடிகை மியா கலிஃபா சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் தொடர்ந்து தனது ஹாட் ஸ்டில்ஸை ஷேர் செய்த வண்ணமிருக்கிறார்.

https://twitter.com/miakhalifa/status/1255990524760096768

சமீபத்தில், நடிகை மியா கலிஃபா சிக்ஸ் பேக் வைத்து ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படத்துக்கு மியா கலிஃபாவின் ரசிகர்கள் பலரும் லைக்ஸ் போட்டு கமென்ட்ஸ் பதிவிட்டு வந்தனர். அதில் ஒரு ரசிகை "மியா கலிஃபா வெளியிட்டிருக்கும் புதிய புகைப்படம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவரது உடலமைப்பு பசியின்மையால் இழைத்தது போன்று இருக்கிறது. ரொம்பவும் ஒல்லியாக காணப்படுகிறார்" என்று கமென்ட் போட்டிருந்தார். அதற்கு மியா கலிஃபா "எனக்கும் உனது உடலமைப்பு மிகவும் பிடிக்கவில்லை" என்று பதில் கூறியிருக்கிறார். இதனால் அந்த நபர் தனது பதிவையே நீக்கிவிட்டார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full