முனிஷ்காந்த்-விஜயலட்சுமி காம்போவில் வந்த 'மிடில் கிளாஸ்' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

By subhashini · 21/11/2025

சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் நடுத்தர குடும்பம் தொடர்பான படங்கள் அதிகமாக வந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது உருவாகியிருக்கும் படம் மிடில் கிளாஸ். இந்த படத்தில் முனிஷ்காந்த், விஜயலட்சுமி, குரேஷி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை கிஷோர் இயக்கி இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் முனிஷ்காந்த், விஜயலட்சுமி இருவரும் கணவன்- மனைவியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள். அன்றாட குடும்ப வாழ்க்கை போல மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் இருவரும் வாழ்ந்து வருகிறார்கள். எப்படியாவது தங்களுடைய வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று பல வேலைகளை செய்து இருவரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில்தான் விஜயலட்சுமி தம்பியின் திருமணம் வருகிறது.

எப்படியாவது எல்லோரைவிட நிறைய மொய் வைக்க வேண்டும் என்று விஜயலட்சுமி சொல்கிறார். இதனால் முனிஷ்காந்த் என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி நிற்கிறார். அந்த நேரத்தில் முனிஷ்காந்த் அப்பா, ஒரு சேட்டுக்கு சென்னையில் இருக்கும் கடை ஒன்று இலவசமாக கொடுக்கிறார். கிட்டத்தட்ட பல வருடம் கழித்து அந்த சேட்டு, தன் முதலாளி மகன் முனிஷ்காந்த் என்பதால் ஒரு கோடிக்கு செக் போட்டு கொடுக்கிறார்.
ஆனால், கொடுத்த செக்கை வாங்கிக்கொண்டு வரும் வழியில் முனிஷ்காந்த் ஒரு விபத்தில் சிக்கிக் கொள்கிறார்.

அந்த செக் தொலைந்து விடுகிறது. அதற்குப் பிறகு என்ன ஆனது? செக் மீண்டும் கிடைத்ததா? நடுத்தர வாழ்க்கையை முனிஷ்காந்த் வாழ்ந்தாரா? விஜயலட்சுமி என்ன செய்தார்? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.
படத்தில் முனிஷ்காந்த், விஜயலட்சுமி இருவருமே நடித்திருக்கிறார்கள் என்பதை விட வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். முனிஷ்காந்த் பொறுமை, விஜயலட்சுமி கோபம் என இரண்டுமே சிறப்பாக இருக்கிறது.
இவர்களை அடுத்து படத்தில் முனிஷ்காந்த் நண்பர்களாக வரும் குரேஷி, கோடாங்கி புகழ் வடிவேலு ஆகியோர் உடைய நகைச்சுவை எல்லாம் நன்றாக இருக்கிறது. படத்தின் முதல் பாதி விஜயலட்சுமி தம்பியின் திருமண ஏற்பாடு செய்வதில் செல்கிறது.

அதனால் வரும் சண்டைகள் எல்லாம் கலகலப்பாக இருக்கிறது. இரண்டாம் பாதி
செக் தொலைவதால் எமோஷனலாக காட்சி செல்கிறது. ஆங்காங்கே காமெடி காட்சிகள் ரசிக்கும் படி இருக்கிறது. கிளைமாக்ஸ் என்ன நடந்தது? என்பதை இயக்குனர் விறுவிறுப்பாகவும் சொல்லி இருக்கிறார்.
இருந்தாலும் ஆங்காங்கே சில லாஜிக் மீறல் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் அழுத்தமான காட்சிகள் இருந்திருந்தால் நன்றாக இருக்கும். டெக்னிக்கலாக படம் நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் குடும்பமாக எல்லோரும் சென்று பார்க்கும் படமாக தான் இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=bI94E5JbJCc

நிறை:

முனிஷ்காந்த், விஜயலட்சுமி நடிப்பு அருமை

படத்தினுடைய முதல் பாதி நன்றாக இருக்கிறது.

கிளைமாக்ஸ் ஓகே

காமெடி காட்சிகள்

ஒளிப்பதிவு பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது.

நடுத்தர வாழ்க்கையின் கதை

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

சில காட்சிகளை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்

இரண்டாம் பாதி பொறுமையாக செல்கிறது

மொத்தத்தில் மிடில் கிளாஸ் - நடுத்தர மக்களின் எமோஷன்

Tamil Behind Talkies AMP · Quick view
View full