50 வயதில் 27 வயது பெண்ணுடன் திருமணம் செய்த பையா பட வில்லன். தற்போது முன்னாள் காதலியுடன் எடுத்த படு மோசமான புகைப்படத்தை வெளியிட்டு ஏற்படுத்திய சர்ச்சை .

By Rajkumar · 19/5/2020

தமிழில் கார்த்தி நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான 'அலெக்ஸ் பாண்டியன் ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் பாலிவுட் நடிகர் மிலந்த் சோமன். அலேக்ஸ் பாண்டியன் படத்திற்கு பின்னர் லெக்ஸ் பாண்டியன், வித்தகன், பையா, பச்சைக்கிளி முத்துச்சரம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தமிழில் பரிட்சயமான நடிகர் இல்லை என்றாலும் ஹிந்தியில் இவர் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருகிறார்.

முன்னாள் காதலியுடன் எடுத்த புகைப்படம்

நடிகர் மிலந்த் சோமனுக்கு தற்போது 54 வயது ஆகிறது. இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு 2006-ல் பிரெஞ்சு நடிகையை மணந்து பின்னர் விவாகரத்து செய்து விட்டார். அதன் பின்னர் இரண்டு வருடங்களுக்கு முன்பு அங்கிதா கொன்வர் என்ற 26 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் செய்துகொண்ட போது மகள் வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டார் என்று விமர்சனங்கள் கூட எழுந்தன.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மிலந்த் தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இந்த நிலையில் தனது முன்னாள் காதலியுடன் பல ஆண்டுகளுக்கு முன் எடுத்த படு மோசமான புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.அந்த புகைப்படத்தை பார்க்க இங்கே அவரின் இன்ஸ்டாகிராம் லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

இரண்டாம் மனைவியுடன் மிலந்த்

தற்போது அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் மிலிந்த் சோமன் வெளியிட்டு, “இது 25 வருடம் பழமையான படம். அப்போது சமூக வலைத்தளங்கள், இணையதளம் கிடையாது. இப்போது அந்த புகைப்படத்தை வெளியிட்டால் என்ன எதிர்வினைகள் வரும் என்று ஆச்சரியப்படுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. மிலிந்த் சோமன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் சிலர் தயாராகி வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full