"அதை கொண்டு வந்து என்ன சாதிக்க போறீங்க., ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினையா?.." - உதயநிதி ஆவேசம்.

By Dhilip Kumar · 11/9/2023


பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு சென்னை செல்வதற்காக உதயநிதி ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்திதார் ஏழரை லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி தெரிவித்துள்ளது. மணிப்பூரில் மிகப்பெரிய போராட்டங்கள் நடந்து வருகிறது அதைப் பற்றி மோடி ஏதும் வாய் திறந்து பேசவில்லை சர்ச்சைகள் இடிக்கப்பட்டுள்ளது முதலில் அதைப் பற்றி பேசுவோம் அதன் பிறகு சாதனத்தை பற்றி பேசுவோம் என்றும் அவர் கூறினார்.

அவர் கூறியது:

ஒரே நாடு ஒரே தேர்தலில் கலைஞர் எப்போது ஆதரித்தார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருக்கும் போது ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்தார். ஆனால் தற்போது அதற்கு ஆதரவளித்து வருகிறார். அதற்கு என்ன சொல்வது பேட்டி கூட கொடுக்காமல் வெறும் கடிதம் மூலமாகவே எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அதை கொண்டு என்ன சாதிக்க போகிறீர்கள். தற்போது தான் பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் தேர்தல் நடந்து முடிந்தது. ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்தால் அவர்களின் ஆட்சி கலைந்து விடாதா இது போன்ற நிறைய கேள்விகள் உள்ளது.

ஏழரை லட்சம் கோடி ஊழலுக்கு பதில் சொல்ல வைக்க இல்லாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினையை கிளப்பி வருகின்றனர். இந்திய பெயர் மாற்றம் குறித்து கேட்ட கேள்விக்கு இந்தியாவை மாற்றி மாற்றி காட்டுகிறேன் என்று மோடி கூறினார் அவர் சொன்னது போலவே செய்து விட்டார் அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சனாதனம் குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர் திமுக கட்சி கொள்கைக்காக தொடங்கப்பட்ட  கட்சி. ஆட்சி அதற்கு அடுத்தது தான். உங்களுக்கு அதைவிட முக்கியம் சமூக நீதி எனவே அது தொடர்பாக தொடர்ந்து நான் பேசுவேன்.

அண்ணா பெரியார் அம்பேத்கர் திருமாவளவன் ஆராசா யாரும் பேசாதது நான் ஒன்றும் பேசவில்லை. 2024 தேர்தலில் பாசிச பாஜகவை தோற்கடித்து அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இதுவரை ஏழரை லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி தெரிவித்துள்ளது. அதை நான் கூறவில்லை சிஏஜி அறிக்கை கூறியுள்ளது. மணிப்பூரில் மிகப்பெரிய போராட்டங்கள் நடந்து வருகிறது அதைப் பற்றி மோடி ஏதும் வாய் திறந்து பேசவில்லை சர்ச்சைகள் இடிக்கப்பட்டுள்ளது முதலில் அதைப் பற்றி பேசுவோம்.

https://youtu.be/rYwV_lN12Fw?si=mEs__lGaK4DT-s5J

அங்கு 300 பேர் படுகொலை செய்து உள்ளனர் இணையம் வசதி துண்டிக்கப் பட்டு உள்ளது. அங்கு மின்சாரம் வசதி செய்ய படவில்லை அது தொடர்பாக பிரதமர் மோடி ஏதும் வாய் திறக்கவில்லை. அதன் பிறகு சாதனத்தை பற்றி பேசுவோம் என்றும் அவர் கூறினார். சனாதனத்தை பற்றி தற்போது நான் பேசவில்லை ஒழிப்பு மாநாட்டில் தான் அது பற்றி நான் பேசினேன் அதன் பிறகு நீங்கள் தான் அதை பற்றி பேசிக்கொண்டே இருக்கிறிர்கள். என்றும் அவர் பதிலளித்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full