தமிழ் சினிமாவில் திகில் படங்கள் வரிசையில் ராட்சசன் படத்திற்கு முக்கிய இடம் உண்டு. விஷ்ணு, விஷால், அமலா பால் நடித்த இந்த படத்தை ராம் குமார் இயக்கி இருந்தார். அந்த படத்தை தயாரித்த ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் மிரள் படத்தை தயாரித்துள்ளது. சக்திவேல் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு பிரசாத் இசையமைத்துள்ளார். பரத்,, வாணி போஜன் நடித்துள்ள இந்த படத்தின் முழு விமர்சனத்தை தற்போது காணலாம்.

கதைக்களம் :

படத்தில் நாயகனாக வரும் பரத் நாயகி வாணி போஜனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் ஆனால் இவர்களது திருமணத்தை வாணி போஜனின் தந்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். ஒரு கணவன் மனைவி திருமணத்திற்கு பின்னர் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் போது வாணி போஜனுக்கு அடிக்கடி அமானு விஷயமாக கனவுகள் வருகிறது. தனக்கு வரும் அமானுஷ்ய கனவுகளால் வாணி போஜன் மனதளவில் பாதிக்கப்படுகிறார். பின்னர் இந்த பிரச்சினைகள் தீர குல தெய்வத்திற்கு கிடா வெட்டினால் சரியாகும் என்று முடிவெடுத்து சொந்த ஊருக்கு பரிகாரம் செய்யசெல்கின்றனர். .

Advertisement

ஆனால் சென்ற முதல் நாளே பரத்திற்கு சில நாட்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த ஒரு ப்ராஜெக்ட் திடீரென்று கிடைக்கிறது. இதனால் இரவோடு இரவாக வாணி போஜன் மற்றும் பரத் இருவரும் தங்கள் மகனை அழைத்துக் கொண்டு மீண்டும் சென்னை திரும்புகிறார்கள். அப்படி செல்லும் வழியில் நடக்கும் பல எதிர்பாராத அதிர்ச்சியூட்டும் விஷயங்களை இருவரும் எப்படி எதிர்கொள்கின்றனர்? வாணி போஜன் கனவுகளுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு ? போன்றவற்றை எல்லாம் ஒரு திரில்லர் பேக்கேஜ் ஆக இந்த படத்தின் கதை அமைந்திருக்கிறது.

நிறைகள் :

படத்தின் கதை மற்றும் திரைக்கதை மிகவும் தெளிவாக இருக்கிறது. அறிமுக இயக்குனர் சக்திவேல் முதல் படம் அல்லாமல் படத்தை சிறப்பாக இயக்கி இருக்கிறார்.  

Advertisement

பரத்தின் நடிப்பு மிக சிறப்பாக இத்தனை ஆண்டு அனுபவம் அவரது நடிப்பில் தெரிகிறது.

Advertisement

படத்தின் ஆரம்பம் முதலே படத்தின் கதை மற்றும் திரைகதை விறுவிறுப்பாகவே சென்று கொண்டு இருக்கிறது.

படத்தின் இசையமைப்பாளர் பிரசாத் இந்த படத்தின் மிகப்பெரிய பலம், இவர் ஏற்கவே யாமிருக்க பயமேன் படத்திற்கு இசைமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளருக்கு நிச்சயம் ஒரு பாராட்டு கொடுக்க வேண்டும். படத்தின் பல திகில் காட்சிகளில் நம்மை பயப்பட வைத்ததற்கு இவரது ஒளிப்பதிவு முக்கிய காரணம்,

குறைகள் :

படத்தின் குறைகள் என்று சொல்லிக்கொள்ளும்படி பெரிய விஷயங்கள் இல்லை.

ஒரு சிலருக்கும் முதல் பாதி மெதுவாக நகர்வது போல தெரியலாம்.

இருப்பினும் படத்தின் இரண்டாம் பாதியில் சில twistகள் வருகிறது. அதை ஒரு சிலர் ஏற்றுக்கொள்வார்கள் ஒரு சிலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இறுதி அலசல் :

இந்த படத்தின் கதையை பல படங்களில் பார்த்தது போல் இருந்தாலும், அதனை இயக்குனர் கொடுத்து இருக்கும் விதமும், ஒரு திரில்லர் படத்திற்கு உரிய Templeteல் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. மேலும், படத்தின் climax வரை படத்தின் Suspenseஐ கொண்டு சென்று இருப்பது படத்திற்கு வெற்றி. சமீப காலமாக தமிழ் சினிமாவில் ஒரு நல்ல பேய் படத்தை பார்க்க முடியவில்லையே என்ற ஒரு குறையை இந்த படம் தீர்த்துவைத்து இருக்கிறது. மொத்தத்தில் மிரல் – மிரட்டி இருக்கிறது.

Advertisement