சைபர் கிரைமில் அநியாயமாக பணத்தை இழந்த சீரியல் நடிகர் செந்தில் - வேதனையில் வெளியிட்ட வீடியோ
சைபர் கிரைமில் பணம் இழந்து விட்டதாக சீரியல் நடிகர் செந்தில் வெளியீட்டிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் செந்தில். இவர் முதன் முதலாக ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜே வாக தான் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர்களில் புகழ் பெற்ற சீரியலாக இருந்தது “சரவணன் மீனாட்சி”. இந்த தொடரில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் செந்தில்.
இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ஸ்ரீஜா. சரவணன் மீனாட்சி சீரியலுக்கு பிறகு செந்திலுக்கு சினிமாவில் நடிக்க பட வாய்ப்புகள் வந்தது. அதன் பின் இவர் தவமாய் தவமிருந்து, செங்காத்து பூமியிலே, கண்பேசும் வார்த்தைகள், வெண்ணிலா வீடு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், சினிமாவில் இவருக்கு பெரிய அளவில் மக்கள் மத்தியில் ரீச் கிடைக்காததால் மீண்டும் சின்னத்திரை நோக்கிய பயணம் செய்ய தொடங்கினார்.
செந்தில் குறித்த தகவல்:
அதற்கு பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிளை, நாம் இருவர் நமக்கு இருவர், நாம் இருவர் நமக்கு இருவர் 2 போன்ற பல தொடர்களில் நடித்து இருந்தார். தற்போது இவர் ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் அண்ணா என்ற தொடரில் நடிக்கிறார். இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக நித்யா ராம் நடிக்கிறார். இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
செந்தில் வீடியோ:
இப்படி இருக்கும் நிலையில் ஆன்லைன் மூலம் பணம் இழந்து விட்டதாக செந்தில் வெளியிட்டிருக்கும் அதிர்ச்சி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், எனக்கு தெரிந்த நபர் ஒருவர் whatsapp நம்பரில் இருந்து எனக்கு,15,000 பணம் வேணும் என்று மெசேஜ் பண்ணி இருந்தார். அப்போது நான் வண்டி ஓட்டி கொண்டிருந்ததால் அவர் சொன்ன நம்பருக்கு பணம் அனுப்பி விட்டேன். அதற்குப் பிறகு பெயரைப் பார்த்தால் வேறு ஒருவருடைய பெயர் இருந்தது.
பணம் இழந்த சம்பவம்:
உடனே நான் அதைப்பற்றி போன் செய்து கேட்டேன். அதற்கு அவர், என்னுடைய whatsapp ஹேக் செய்யப்பட்டது என்று கூறியிருக்கிறார். இதுபோல 500 பேர் எனக்கு கால் செய்திருக்கிறார்கள்.
அப்போதுதான் நான் சைபர் கிரைமில் பணம் இழந்துவிட்டது என்பது தெரிந்தது. உடனே சைபர் கிரைம் போலீசிற்கு புகார் அளித்திருக்கிறேன். தயவு செய்து மக்களே உஷாராக இருங்கள். யார் பணம் கேட்டாலும்
ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து கன்ஃபார்ம் செய்துவிட்டு அனுப்புங்கள்.
செந்தில்-ஸ்ரீஜா குடும்பம்:
இதை ஏமாற்று வேலை நடக்கிறது என்று ரொம்ப எமோஷனாக பேசி இருக்கிறார். இதற்கிடையில் செந்தில் அவர்கள் தன்னுடன் நடித்த நடிகை ஸ்ரீஜா என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆகி 8 ஆண்டுகள் கழித்து தான் செந்தில் – ஸ்ரீஜா தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. கடந்த ஆண்டு இவர்கள் தங்கள் குழந்தையின் முதல் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி இருந்தார்கள்.