கொஞ்சம் கஷ்டம் தான் ஆனா பார்த்துக்கலாம் - தன்னுடைய புது பிசினஸ் பற்றி மிர்ச்சி செந்தில் சொன்ன தகவல்

By subhashini · 26/2/2025

செந்தில்- ஸ்ரீஜா தம்பதியினர் புது பிசினஸ் துவங்கியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் செந்தில். இவர் முதன் முதலாக ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜே வாக தான் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர்களில் புகழ் பெற்ற சீரியலாக இருந்தது “சரவணன் மீனாட்சி”. இந்த தொடரில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் செந்தில்.

இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ஸ்ரீஜா. சரவணன் மீனாட்சி சீரியலுக்கு பிறகு செந்திலுக்கு சினிமாவில் நடிக்க பட வாய்ப்புகள் வந்தது. அதன் பின் இவர் தவமாய் தவமிருந்து, செங்காத்து பூமியிலே, கண்பேசும் வார்த்தைகள், வெண்ணிலா வீடு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், சினிமாவில் இவருக்கு பெரிய அளவில் மக்கள் மத்தியில் ரீச் கிடைக்காததால் மீண்டும் சின்னத்திரை நோக்கிய பயணம் செய்ய தொடங்கினார்.

செந்தில்-ஸ்ரீஜா குறித்த தகவல்:

அதற்கு பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிளை, நாம் இருவர் நமக்கு இருவர், நாம் இருவர் நமக்கு இருவர் 2 போன்ற பல தொடர்களில் நடித்து இருந்தார். தற்போது இவர் ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் அண்ணா என்ற தொடரில் நடிக்கிறார். இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதேபோல் நடிகை ஸ்ரீஜாவும் திருமணத்திற்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த மாப்பிளை என்ற தொடரில் தன்னுடைய கணவருக்கே ஜோடியாக நடித்திருந்தார்.

செந்தில்-ஸ்ரீஜா புது பிசினஸ்:

அதற்குப்பின் வெப் சீரிஸ், youtube சேனல் என்று பிசியாக இருந்தார். அதற்குப்பின் பல வருடங்கள் கழித்து மகன் பிறந்தவுடன் மீடியாவில் இருந்து ஸ்ரீஜா விலகி இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் செந்தில்-ஸ்ரீஜா புதிதாக பிசினஸ் தொடங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகை நயன்தாராவின் சொந்த ஊரான திருவல்லாவில் தான் ஸ்ரீஜாவினுடைய சொந்த ஊரும். இங்கு தான் ஸ்ரீஜா தன்னுடைய குடும்பத்துடன் இருக்கிறார்.

செந்தில் பேட்டி:

தற்போது தன்னுடைய சொந்த ஊரில் தான் கஃபே ஒன்றை ஸ்ரீஜா செந்தில் தொடங்கி இருக்கிறார். இது தொடர்பாக செந்தில் கூறியிருப்பது, என்னுடைய மகன் பிறந்த பிறகு அவனை கவனித்துக் கொள்வதிலேயே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. அதனால் சீரியல், வெப் சீரிஸ் என்று எதிலுமே யோசிக்காமல் இருந்தார். இந்த சமயத்தில்தான் திருவல்லாவில் ஒரு கஃபே விலைக்கு வந்தது. முன்னாடியே நடத்திட்டு இருந்தவர்கள் தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் தான் அதை வாங்கி பண்ணலாம் என்று ஸ்ரீஜா சொன்னார்.

https://www.youtube.com/watch?v=SGlgSBktjBI

புது பிசினஸ் பற்றி சொன்னது:

அவங்க ஒரு முடிவு எடுத்தால் அது தெளிவாக, சரியாக இருக்கும் என்பதால் நானும் உடனே சரி என்று சொன்னேன். ஆனால், நாங்கள் நினைத்த மாதிரி இல்லை. பெரிய வேலையாக இருக்கிறது. ஷூட்டிங் முடிந்தால் வீடு என்று இருந்தவன் இப்ப ரெண்டு நாள் லீவு கிடைத்தாலும் கேரளாவுக்கு போய் அங்கு கஃபே வேலைகளில் இறங்க வேண்டியதாகி விட்டது. மத்தபடி நிர்வாகம் முழுவதும் ஸ்ரீஜா பார்த்து கொள்கிறாள். செட்டாகுற வரைக்கும் கொஞ்சம் கஷ்டமாக தான் தெரியும். பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full