அவர மாதிரி நான் கிரிக்கெட் ஆட முடியும்,ஆனா என்ன மாதிரி அவரால - மேடையில் சிவா கலகல பேச்சு.

By Rajkumar · 23/2/2023

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் மிர்ச்சி சிவா. இவரை அவருடைய ரசிகர்கள் 'அகில உலக சூப்பர் ஸ்டார்' என்று தான் செல்லமாக அழைக்கிறார்கள். இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் ரேடியோ மிர்ச்சியில் வானொலி அறிவிப்பாளராக பணியாற்றினார். அதன் பின்னர் சென்னை வந்து சின்ன சின்ன நாடகங்களில் கலந்து கொண்டு தனது நடிப்பு திறமையை வளர்த்தி கொண்டார். மேலும், சிவா இந்த ரேடியோ ஜாக்கி வேலையை பார்த்துக் கொண்டே படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார்.

பின் 2001 ஆம் ஆண்டு ஷாம் நடிப்பில் வெளிவந்த 12B என்ற படத்தின் மூலம் தான் சிவா சினிமா உலகிற்கு அறிமுகமானார்.அதன் பின்னர் விசில் என்ற படத்தில் நடித்தார். இந்த படங்களில் இவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் தனது ரேடியோ ஜாக்கி வேலைக்கு சென்று விட்டார். பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 600028 என்ற படத்தின் மூலம் தான் சிவா மக்கள் மத்தியில் பிரபலமானர். இதனை தொடர்ந்து மிர்ச்சி சிவா பல படங்களில் நடித்தார்.

தற்போது இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இறுதியாக இவர் இடியட் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ஹாரர் காமெடி பாணியில் உருவாகிஇருந்தது. மேலும், இந்த படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்து இருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியிருக்கும் சுமோ படமும் கூடிய விரைவில் திரைக்கு வெளிவர இருக்கிறது.

இந்த படத்தில் ப்ரியா ஆனந்த் நடித்திருக்கிறார். வேல்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் யோகிபாபு, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து இவர் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும், காசேதான் கடவுளடா, சலூன், கோல்மால் போன்ற பல படங்களில் சிவா நடித்து வருகிறார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி என்ற படம் நீண்ட நாட்களாகவே நிலுவையில் உள்ளது. இது கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிர்ச்சி சிவாவை அடிக்கடி இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா உடன் ஒப்பிட்டு பிரிட்டிஷன்கள் மீம்ஸ் போட்டு வருவது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் நட்சத்திர கிரிக்கெட் துவங்கப்பட்டு இருந்தது. இதில் கோலிவுட் அணியில் சிவா விளையாட்டு வருகிறார்.

எப்படி இருக்க சிவாவை மீண்டும் ரோகித் சர்மா உடன் ஒப்பிட்டு பலவிதமான மீன்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் படத்தின் பிரெஸ் மீட்டில் பேசிய சிவாவிடம் ரோஹித் சர்மாவுடன் அவரை ஒப்பிடுவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சிவா 'என்னையும் ரோஹித் சர்மாவையும் ஒப்பிட்டு நிறைய மீம்ஸ்கள் போடுகிறார்கள். என்னால் ரோஹித் சர்மா போல் கிரிக்கெட் ஆட முடியாது. அதேபோல என்னைப்போல அவரால் டான்ஸ் ஆட முடியாது' என்று வேடிக்கையாக கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full