தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் மிர்ச்சி சிவா. இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் ரேடியோ மிர்ச்சியில் வானொலி அறிவிப்பாளராக பணியாற்றினார். இவர் 1988ஆம் ஆண்டு உடுமலைபேட்டையில் பிறந்தவர். சிவா பத்தாம் வகுப்பு வரை தான் படித்து உள்ளார். அதன் பின்னர் சென்னை வந்து சின்ன சின்ன நாடகங்களில் கலந்து கொண்டு தனது நடிப்பு திறமையை வளர்த்தி கொண்டார். சிவா என்று சொன்னவுடன் அனைவருக்கும் அவருடைய நடனம் தான் நியாபகத்திற்கு வரும். இந்த ரேடியோ ஜாக்கி வேலையை பார்த்துக் கொண்டே படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார் சிவா. 2001 ஆம் ஆண்டு ஷாம் நடிப்பில் வெளிவந்த 12B என்னும் படத்தின் மூலம் தான் சிவா சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் விசில் என்ற படத்தில் நடித்தார்.

இந்த படங்களில் இவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் தனது ரேடியோ ஜாக்கி வேலைக்கு சென்று விட்டார். பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 600028 என்ற படத்தின் மூலம் தான் சிவா மக்கள் மத்தியில் பிரபலமானர். இதனை தொடர்ந்து சரோஜா என்ற படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்தது. இதனை தொடர்ந்து சிவா அவர்கள் தமிழ்ப்படம் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் அனைத்து படங்களையும் கிண்டல் செய்யும் வகையில் வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந்து இவர் சுந்தர் சி இயக்கத்தில் விமலுடன் இணைந்து கலகலப்பு என்ற படத்தில் நடித்திருந்தார்

Advertisement

இந்த படமும் வசூல் ரீதியில் நல்ல வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து தில்லுமுல்லு 2, சொன்னா புரியாது, யா யா, வணக்கம் சென்னை, சென்னை 600028 -2 போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். மிர்ச்சி சிவா, கடந்த 2012 ஆம் ஆண்டு பிரியா என்ற பேட்மிண்டன் வீராங்கனையை திருமணம் செய்து கொண்டார். நீண்ட வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் இருவரின் திருமணமும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு, சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மிர்ச்சி சிவா மனைவி பிரியாவுடன் அஜித் மனைவி ஷாலினி

அது மட்டுமல்லாமல் நடிகர் சிவா காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரியா யாருடைய சொந்தக்காரர் என்று தெரிந்தால் ஆச்சர்யப்பட்டு போவீர்கள்.பிரியா வேறு யாரும் இல்லை நம்ம தல அஜித் குமாரின் நெருங்கிய சொந்தகாரரம். இவர்கள் இருவரது திருமணத்திற்கு நடிகர் அஜித் குடும்பத்துடன் வந்து வாழ்த்தியுள்ளார். எப்படியோ அஜித்திற்கு சொந்தகாரரான நடிகர் சிவா , நடிகர் அஜித் நடித்த ‘மங்காத்தா ‘ படத்தில் நடிக்காதது கொஞ்சம் ஆச்சர்யமாக தான் இருக்கிறது.

Advertisement
Advertisement