தற்போது சோசியல் மீடியா முழுவதும் உதயநிதியின் சனாதன கருத்து தான் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த பேச்சிற்கு பா ஜ கவை சேர்ந்த பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் உதயநிதி தலையை கொண்டு வருவோருக்கு 10 கோடி சன்மானம் வழங்கப்படும் என்று சாமியார் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழ் பிரபலங்கள் சிலர் உதயநிதிக்கு ஆதரவாக பேசி வரும் நிலையில் தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘சனாதனக் கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும் என்றுதான் அமைச்சர் உதயநிதி பேசினாரே தவிர எந்த மதத்தையும் மத நம்பிக்கையையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை. அமைச்சர் உதயநிதி பேசிய முழு விவரம் அறியாமல் ஒன்றிய பிரதமர் பேசுவதா? பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வையும் பெண்ணடிமைத்தனத்தையும் நியாயப்படுத்தும் பழமைவாத வர்ணாஸ்ரம சிந்தனைகளுக்கு எதிராக, இந்திய துணைக்கண்டத்தில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ஜோதிபா பூலே, நாராயணகுரு, வள்ளலார், வைகுண்டர் என பல பெரியோர்கள் குரல் கொடுத்து வந்துள்ளன.

Advertisement

நிலவுக்குச் சந்திராயன் விடும் இந்தக் காலத்திலும் சாதி வேற்றுமைகள் கற்பித்தும், வர்ணாசிரமக் கருத்துகளைச் சொல்லி பாகுபாடுகளை வலியுறுத்தியும், இந்தப் பிளவுபடுத்தும் எண்ணங்களுக்கு ஆதரவாக சாஸ்திரங்களையும், சில பழைய நூல்களையும் மேற்கோள் காட்டியும் சிலர் பிரச்சாரம் செய்து வரத்தான் செய்கிறார்கள். நானே குழந்தைத் திருமணம் செய்து கொண்டவன்தான்’ என்றும், அந்த எண்ணங்களை நியாயப்படுத்தி, குழந்தைத் திருமணத்தை ஆதரித்து மாநிலத்தின் ஆளுநரே பேசுகிறார், குழந்தைத் திருமணம் செய்தவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தால், அதற்கும் தடை போடுகிறார்

பெண்களை இழிவுபடுத்தியும், அவர்கள் வேலைக்குப் போகக் கூடாது என்றும், கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது என்றும், மறுமணத்துக்கு மந்திரமே கிடையாது என்றும் இன்னமும் சிலர் ஆன்மீக மேடைகளில் பேசி வருகிறார்கள்.இனப்படுகொலை’ என்ற சொல்லை தமிழிலோ, ஆங்கிலத்திலோ அமைச்சர் உதயநிதி எந்த இடத்திலும் சொல்லவில்லை, ஆனால் அப்படிச் சொன்னதாக பரப்பினார்கள்.

Advertisement

பொய்யர்கள்தான் இதனை பரப்புகிறார்கள் என்றால், பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் ஒன்றிய அமைச்சர்கள், பா.ஜ.க. முதலமைச்சர்கள் உண்மையில் அமைச்சர் உதயநிதி என்ன பேசினார் என்பதைத் தெரிந்து கருத்து சொல்லி இருக்க வேண்டும்.மாறாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள் அதே பொய்ச்செய்தியையே பரப்பியுள்ளார்கள்.

Advertisement

அமைச்சரின் தலைக்கு விலை வைத்து ஒருவர் அறிவிக்கிறார் என்றால், அவர் மீது உத்தரப்பிரதேச மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததா? வழக்கு போட்டதா? மாறாக, உதயநிதி மேல் வழக்கு போட்டுள்ளார்கள்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Advertisement