ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு 4000 உள்பட முதல்வராக 3 கோப்புகளில் ஸ்டாலின் போடப்போகும் முதல் கையெழுத்து.

By Rajkumar · 6/5/2021

தமிழக முதல்வராக முதன் முறையாக பொறுப்பேற்க இருக்கும் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட போகும் 3 முக்கிய கோப்புகள் பற்றிய விவரம் தற்போது வெளியாகி இறுகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி மு க மாபெரும் வெற்றிபெற்றதன் மூலம் முதல் முறையாக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கவிருக்கிறார் மு க ஸ்டாலின். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார்.இப்படி ஒரு நிலையில் முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் ஸ்டாப்களின் முதலில் 3 முக்கிய திட்டங்களை செயல்படுத்த தனது முதல் கையெழுத்தை போட இருக்கிறார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்து இருந்தார். அதில் அரிசி ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் முக்கியமான திட்டமாகும். இப்படி ஒரு நிலையில் பதவி ஏற்றதும் கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துவார். அதன் பிறகு கோட்டைக்கு செல்கிறார். அங்கு முதல்-அமைச்சர் இருக்கையில் அமர்ந்ததும் 3 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையும் பாருங்க : பிக் பாஸ் இளம் நடிகைக்கு கொரோனா. ஐயயோ, இவர் கூட பிக் பாஸ் ஜோடில ஆடுனவங்க நிலைமை ?

முதன் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் ஸ்டாலின், 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் மிக முக்கியமான ஒன்றாக கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்திடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல தமிழகம் முழுவதும் டவுன் பஸ்களில் (நகர பேருந்து) பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் அதற்கான கோப்பில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திடுவார் எனவும் கூறப்படுகிறது.

அதற்கு அடுத்தபடியாக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகையாகத் தற்போது வழங்கப்படும் ரூ.25 ஆயிரத்தை ரூ.30 ஆயிரமாக உயர்த்துவதுடன் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்துக்கும் ஸ்டாலின் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

behindtalkies AMP · Quick view
View full