'குட்டி சமந்தா' - இளசுகளின் கவனம் ஈர்த்த ‘மாடர்ன் லவ் சென்னை’ ஷோபா - யார் இவர் ?

By Arun · 21/5/2023

மாடர்ன் லவ் சென்னை படத்தில் நடித்த நடிகை ஸ்ரீ கௌரி ப்ரியா குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனர்கள் தியாகராஜன் குமாரராஜா, பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜூமுருகன், கிருஷ்ணகுமார் ராமகுமார், அக்‌ஷய் சுந்தர் போன்ற இயக்குனர்களின் இயக்கத்தில் வெளியான படம் தான் மாடர்ன் லவ் சென்னை. இது ஒரு வெப் சீரிஸ் ஆகும்.

https://twitter.com/A_forAbii/status/1659370903808122880

இந்த வெப் சீரிஸ் அமேசான் ப்ரைம் ஓ டி டி தளத்தில் கடந்த மே மாதம் 18ஆம் தேதி வெளியாகியிருந்தது. இது ஆந்தலாஜி பாணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை ஆறு பாகங்களை கொண்டிருக்கின்றது. மேலும், இதில் மூன்று பாகங்களுக்கு இளையராஜா இசை அமைத்திருக்கிறார். மீதி பாகங்களுக்கு ஜிவி பிரகாஷ் குமார், ஜான் ரோல்டன், யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.

படத்தின் கதை:

இயக்குனர் ராஜூ முருகனால் தழுவி எழுதி இயக்கப்பட்ட முதல் அத்தியாயம் லால் குண்டா பொம்மைகள். காதல், கருக்கலைப்பு போன்ற பெண்கள் சந்திக்கும் பிரச்சனையை இந்த பாகம் கூறி இருக்கிறது. பானி பூரி விற்கும் ஒருவனை பெண் ஒருவர் காதலிக்கிறார். அந்த காதல் அவளை என்ன செய்கிறது என்பதை இந்த முதல் பாகத்தின் கதை. இந்த படத்தில் ஷோபா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஸ்ரீ கௌரி பிரியா.

ஸ்ரீ கௌரி பிரியா குறித்த தகவல்:

இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று இருக்கிறது. மேலும், இவரை பலரும் பார்ப்பதற்கு சமந்தா போலவே இருக்கிறீர்கள் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஸ்ரீ கௌரி பிரியா குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் 2018 ஆம் ஆண்டு தி மிஸ் ஹைதராபாத் என்ற பட்டத்தை பெற்றவர். ரைட்டர் பத்மபூஷன் என்ற தெலுங்கு திரைப்படத்தில் இவர் முதன்முதலாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் இவருடைய நடிப்பு நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அதற்கு பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. அந்த வகையில் மாடர்ன் லவ் சென்னை படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வரவேற்க்கப்படுகிறது. இதை அடுத்த தற்போது இவர் தமிழ் படங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full