ஸ்டாலின் முன்னிலையில் மோடி கையால் டாக்டர் பட்டத்தை வாங்கிய இளையராஜா - வீடியோ இதோ.

By Siva · 11/11/2022

இளையராஜாவிற்கு பிரதமர் மோடி கௌரவப்பட்டம் வழங்கி இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசையின் ஜாம்பவனாக பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வருபவர் இளையராஜா. இவர் இசையின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து இருக்கிறார். மேலும், இவரின் இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை என்று சொல்லலாம். ஏன்னா, அந்த அளவிற்கு தன்னுடைய இசையால் எல்லோரையும் கட்டிபோட்டவர்.

1976 ஆம் ஆண்டு இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார்.

இளையராஜா திரைப்பயணம்:

மேலும், இவர் கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமை பெற்றவர். இதனால் இவர் பல விருதுகளை பெற்று இருக்கிறார். தற்போது இவர் படங்களில் பிசியாக இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அம்பேத்கரை ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து பலரும் பல்வேறு விமர்சனங்கள் செய்து இருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=Mn1_4Rd3DdI

இளையராஜா Mp சீட்:

இதனை அடுத்து சமீபத்தில் இளையராஜாவுக்கு Mp சீட் கிடைத்து இருக்கிறது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ராஜ்யசபா நியமன எம்.பி. பதவி வழங்கப்படுவது வழக்கம். அதனடிப்படையில் தற்போது இசைஞானி இளையராஜாவுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி, சாதாரண பின்னணியில் இருந்து வந்த இளையராஜா மிகப் பெரிய சாதனை படைத்து இருக்கிறார். மனித உணர்வுகளை பெரிய வாயிலாக அழகுற பிரதிபலித்தவர் இளையராஜா. அவரை நாடாளுமன்ற எம்.பி.யாக நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என குறிப்பிட்டு இருந்தார்.

இளையராஜாவிற்கு கௌரவப்பட்டம்:

இதனை அடுத்து பலரும் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் இளையராஜாவிற்கு மோடி கௌரவப்பட்டம் வழங்கி இருக்கும் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது, தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள காந்த கிராமம் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இருந்தார். மேலும், இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி என பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.

மூன்று பட்டம் வாங்கிய இசைஞானி:

மோடி அவர்கள் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியிருந்தார். இந்நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கும் கௌரவ பட்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. மூன்றாவது முறையாக இளையராஜாவுக்கு கௌரவ பட்டம் கிடைத்திருக்கிறது. இதற்கு முன்னதாக அண்ணா பல்கலைக்கழகமும் மற்றும் விக்னன் பல்கலைக்கழகம் இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full