ஒரே மேடையில் ஒலித்த மோகன் மற்றும் SPBயின் குரல் - காணக் கிடைக்காத அறிய வீடியோ.
தமிழ் சினிமாவின் 80, 90 காலகட்டங்களில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் மோகன் தமிழ் சினிமாவில் ரஜினி , கமல், விஜயகாந்த் என்று பல முன்னாடி நடிகர்கள் பட்டைய கிளப்பி கொண்டு இருந்த கால கட்டத்தில் இவர்களுக்கு எல்லாம் செம்ம காம்படீசன் கொடுத்தவர் நடிகர் மோகன். 80களில் இவரது நடிப்பின் மூலம் தனெக்கென்ற ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். எந்த ஊரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுலகில் கொடி கட்டி பறந்தவர் மோகன். இவர் 1982 ஆம் ஆண்டு பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின் இவருடைய எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். மேலும், வருடம் வருடம் சூப்பர் சிறந்த நடிகர் விருதையும் இவர் தான் பெறுவார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் சக்கை போடு போட்டு கொண்டு நடித்தார்.
இவரை எல்லோரும் மைக் மோகன் என்று தான் அழைப்பார்கள். அதுமட்டும் இல்லாமல் ஒரு நாளிற்கு 18 மணி நேரம் நடிப்பிலேய நேரத்தை செலவிட்டார் மோகன். இவர் கிட்டத்தட்ட 80 படங்களுக்குப் மேல் நடித்து தூள் கிளப்பியவர். மேலும், நடிகர் மோகனின் படம் என்றாலே நிச்சயம் வெற்றி விழா கொண்டாடும் அளவிற்கு ஓடும் என்று எல்லோரும் பேசுவார்கள். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படம் எல்லாமே வித்தியாசமான கதை களம், சூப்பர் ஹிட் பாடல்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். மேலும், 80ஸ் காலகட்டங்களில் வசூல் மன்னனாக திகழ்ந்தவர்.
மோகனின் திரைப்பயணம்:
தயாரிப்பாளர்களின் செல்லப் பிள்ளையும் ஆவார் மோகன். கமலஹாசனுக்கு அடுத்த படியாக காதல் மன்னனாக வலம் வந்தவர் நடிகர் மோகன். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த மோகன் உருவம் படத்திற்கு பின் சினிமாவில் இருந்து காணாமல் போனார். அதன் பின்னர் 9 ஆண்டுகள் கழித்து படத்தில் நடித்தார். இருந்தாலும் முன்பு போல் வெற்றி படங்களை கொடுக்க முடியவில்லை. அதன் பின்னர் இறுதியாக தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான சுட்டபழம் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் மோகன். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
https://www.youtube.com/watch?v=sYs7XFPua7U
மோகனுக்கு குரல் கொடுத்தவர் பற்றிய தகவல்:
இப்படி மோகன் சினிமா உலகில் உச்சத்தில் இருப்பதற்கு அவருடைய குரலும் ஒன்று. மோகனுக்கு டப்பிங் குரல் கொடுத்தவர்களில் ஒருவர் எஸ் என் சுரேந்தர். இவர் 70க்கும் மேற்பட்ட படங்களில் மோகனுக்கு குரல் கொடுத்திருக்கிறார். இவருடைய குரலில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பிடித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சில காலம் மோகன் சொந்த குரலில் நடித்திருந்தார். இருந்தாலும் சுரேந்தர் குரலில் வெளிவந்த படங்கள் தான் ஹிட் கொடுத்து இருந்தது. மேலும், எஸ் என் சுரேந்தர் அவர்கள் டப்பிங் ஆர்டிஸ்ட் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார்.
எஸ்பிபி மற்றும் சுரேந்தர் வீடியோ:
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் இசையமைத்திருக்கிறார்.
இதுவரை 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 600க்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். இவர் யாகசாலை என்ற படத்தின் மூலம் தான் நடிகரானார். அதனைத் தொடர்ந்து நாளைய தீர்ப்பு, பிரியமுடன், சென்னை 600028 போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருந்தாலும் இவருக்கான சரியான அங்கீகாரம் சினிமா உலகில் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். இருந்தும் இன்னும் மோகன் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பதற்கு இவருடைய குரலும் காரணம்.
வைரலாகும் மோகன் பற்றிய அரிய வீடியோ:
அதுமட்டுமில்லாமல் மோகனின் திரைப்பயணத்தில் குரலுக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோல் அவருடைய பாடல்களும் வேற லெவல் இருக்கும். அந்த வகையில் மோகனின் பெரும்பாலான படங்களில் பாடியவர் எஸ் பி பாலசுப்பிரமணியம். இந்நிலையில் இதுவரை காணக்கிடைக்காத காட்சி வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், மோகனுக்கு குரல் கொடுத்த சுரேந்தர் மற்றும் எஸ்பிபி இருவரும் சேர்ந்து மேடையில் பாடியிருக்கிறார்கள். அந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது