தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Advertisement

இப்படி ஒரு நிலையில் இவர் பகாசூரன் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் செல்வராகவன் நாயகனாக நடித்து இருக்கிறார். மேலும், நட்டி, ராதாரவி, vj லயா என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்து இருக்கிறார். சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வை மையமாகக் கொண்டு பகாசூரன் படத்தின் கதையை அமைத்துள்ளனர். பகாசூரன் வருகிற பிப்.17 ஆம் தேதி அதாவது நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

இது தொடர்பாக அடிக்கடி பிரஸ் மீட்களை வைத்து வருகிறார் மோகன். அந்த வகையில் சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற மோகனிடம் பா ரஞ்சித் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த மோகன் ‘ஜி, பகாசூரன் எந்த சமூகத்துக்கும் எதிரான படமும் இல்லை.பா.ரஞ்சித் பட்டியலின மக்களுக்கும் நான் ஓபிசி தரப்பினருக்கும் படம் எடுப்பதாகச் சொல்கிறார்கள். அதில் உண்மையில்லை’

Advertisement

பா ரஞ்சித் தனது மக்களுக்கான உரிமையை பேசுகிறார் அது எனக்கு பிடித்திருக்கிறது. சார்பட்டா படத்திலேயே தான் ஒரு சிறந்த கலைஞர் என நிரூபித்து விட்டார். அவர் இன்னும் பெரிய இடத்திற்கு செல்வார். ஆனால், நான் திரௌபதி படத்தை எடுத்த காரணத்தால் அவர் நட்சத்திரம் நகர்கிறது படத்தை எடுத்தார். இதுபோன்று அவர் தடம் மாற வேண்டாம். அவர் சமூகத்தை சேர்ந்தவர்களில் பிரச்சனையை பேசினால் மட்டும் போதும் என்று நினைக்கிறேன்.

Advertisement

சினிமாவில் நான் யாரையும் எதிரியாக பார்க்கவில்லை இயக்குனர் பா ரஞ்சித் கூட என்னுடைய முகநூல் நண்பர்தான். சில செய்திகளை அடிப்படையில் கள ஆய்வு செய்து பகாசுரன் படத்தை உருவாக்கி இருக்கிறேன். இந்த படம் சமூகத்திற்கு தேவையான ஒரு படமாக இருக்கும். மேலும், இதே போன்று சமூகத்திற்கு தேவையான படங்களை தொடர்ந்து எடுப்பேன் என்று கூறியுள்ளார் இயக்குனர் மோகன்.

Advertisement