தலைவிரித்தாடும் கஞ்சா பழக்கம், ருத்ரதாண்டவம் படத்தில் காண்பிக்கப்பட்ட LSDயை உதாரணம் சொல்லி மோகன் ஜி போட்ட பதிவு.
ருத்ரதாண்டவம் திரைப்படம் இன்னும் மக்களிடம் OTT மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ள காரணம் குறித்து மோகன் ஜி பதிவிட்டுள்ளார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இப்படி இந்த படம் சமூகத்திற்கு தேவையான ஒரு படம் என்று ஒரு புறமும், இந்த படம் பிற்போக்கான படமாக இருக்கிறது என்று மற்றொரு புறமும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. ஆனால், இதையல்லாம் தாண்டி இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று, நல்ல வசூலும் செய்து வருகிறது.இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் நடிப்பில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம்.
இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதையாக இருந்தது. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
https://twitter.com/mohandreamer/status/1765269434372161564
இப்படி ஒரு நிலையில் போதை பொருள் குறித்து பதிவிட்டுள்ள மோகன் ஜி ' LSD Drug பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய காரணத்தால் தான் ருத்ரதாண்டவம் திரைப்படம் இன்னும் மக்களிடம் OTT மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் முடக்கி வைக்கப்பட்டு உள்ளது.. இந்த LSD சாதரண Drug போன்றது அல்ல.. நீங்கள் எடுக்கும் முடிவுகளையே மற்றவர் விரும்புவது போல மாற்றி அமைக்கும்.
பெண்கள் இந்த LSD Drug தெரிந்தோ தெரியமாலோ பயன்படுத்தினால் நீங்கள் மற்றவர்களின் கட்டுப்பாட்டில் அவர்கள் விருப்பம் போல நடந்து கொள்வீர்கள்.. ஒரு வேலை கற்பழிக்க பட்டாலும், எந்த தடையமும் அறிவியல் ரீதியாக கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வீரியம் கொண்டது LSD Drug.. வேலைக்கு, பள்ளி கல்லூரி செல்லும் பெண்கள் யாரையும் நம்பி குளிர்பானங்கள், மது வகைகளை அருந்தாமல் தவிர்ப்பது நல்லது.
https://twitter.com/mohandreamer/status/1765250069396337020
பெற்றோர்கள் கவனம் கொள்க' என்று பதிவிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மோகன் ஜி, தனது சமூக வலைதள பக்கத்தில் 'திரௌபதி 2 அல்லது ருத்ர தாண்டவம் 2' என்று பதிவிட்டு இருந்தார். எனவே இந்த இரண்டு படங்களின் இரண்டாம் பாகத்தை தான் மோகன் ஜி எடுக்கப்போகிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது.ஏற்கனவே தனது அடுத்த படத்தின் நாயகன் ரிச்சர்ட் என்று மோகன் ஜி அறிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.