அப்படி மட்டும் இருந்தால் நான் இயக்குனர் பக்கம் நிற்பேன் - தி கேரளா ஸ்டோரி குறித்து மோகன் ஜி

By Manikandan · 6/5/2023

தி கேரளா ஸ்டோரி படம் குறித்த சர்ச்சைக்கு இயக்குனர் மோகன் ஜி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தி கேரளா ஸ்டோரி. இந்த படத்தில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்தானி உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். இந்த படத்தை விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்து இருக்கிறார்.

இந்த படம் இந்தியில் இந்தியில் உருவாகி பேன் இந்திய படமாக தற்போது வெளியாகி இருக்கிறது. படத்தில் கேரளாவில் அல்லா தான் உலகத்திலேயே உயர்ந்த கடவுள் என்றும் ஹிஜாப் அணிந்து கொண்டால் யாரும் பாலியல் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்றும் கல்லூரி ஹாஸ்டலில் இருக்கும் இந்து-கிறிஸ்தவ மாணவிகளை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றுகிறார்கள். பின் அவர்களை இஸ்லாமிய இளைஞர்கள் மூலம் காதலிக்க வைத்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

தி கேரளா ஸ்டோரி படம்:

திருமணம் செய்து கொண்ட பிறகு அந்த பெண்களை சிரியா, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு அவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளாவும், பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்துகிறார்கள். இறுதியில் அவர்கள் மதவெறியில் இருந்து விடுவிக்கப்பட்டார்களா? அந்த பெண்களுக்கு விடுதலை கிடைத்ததா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படம் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக பல எதிர்ப்புகள் நிலவியது. அதோடு இது இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

படம் குறித்த சர்ச்சை:

அதோடு இந்த படம் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேரளா மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தார்கள். ஆனால், விதிக்கப்பட்ட தடைகள் எல்லாம் மீறி இந்த படம் வெளியாகியிருந்தது. அது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் இந்த படம் வெளியான திரையரங்குகள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மோகன் ஜி கருத்து :

தீவிர சோதனைக்கு பிறகு தான் பார்வையாளர்களை திரையரங்கின் உள்ளே அனுமதித்து இருந்தார்கள். மேலும், வெளியான முதல் நாளிலேயே இந்தியா முழுவதும் இந்த படம் 10 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் குறித்த சர்ச்சை குறித்து பேசி இருக்கும் மோகன் 'நான் படத்தை இன்னும் பார்க்கவில்லை. ட்ரைலர் மட்டும் தான் பார்த்தேன் அதனால் அது குறித்து விமர்சனம் சொல்வது தவறு. அதை தாண்டி சென்சார் பண்ணப்பட்ட படத்தை நீதிமன்றம் தடை செய்யாது அந்த அதிகாரம் அரசுக்கு தான் உண்டு.

அரசுக்கு மட்டும் தான் அதிகாரம் இருக்கு :

நம்மூரில் பார்த்தேன் இந்த படம் தொடர்பாக நிறைய பிரச்சனைகள் சென்று கொண்டிருக்கிறது. படம் பார்த்துவிட்டு அதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்ற விவாதம் வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. அதைத் தாண்டி எல்லா மதத்திலும் இருக்கும் தவறுகளை சொல்லலாமே தவிர மொத்தமாக ஒரு மதம் இப்படித்தான் இருக்கும் என்று சொல்வதை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம் தான். அந்த விஷயத்தை கேரளா ஸ்டோரி செய்திருந்தால் நானும் அதை எதிர்த்து தான் நிற்பேன். அப்படி இல்லாமல் நடந்த விஷயங்களை உண்மையான தரவுகளுடன் சொல்லி இருந்தால் இந்த படத்தை எடுத்த இயக்குனர் பக்கம் நான் நிற்பேன்' என்று ககூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full