மோகன் ஜியின் திரெளபதி 2 படம் ஹிட் கொடுத்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

By subhashini · 23/1/2026

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் திரௌபதி 2. இந்த படத்திலும் ரிச்சர்ட் ரிசி தான் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயானி ஷர்மா, அருணோதயன் உட்பட பலர் நடித்துள்ளார்கள். இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் சுல்தான் என்ற மன்னன் சவுத் இந்தியாவில் நுழைந்து பெருமாள் கடவுளை வணங்கும் மக்களை வலுக்கட்டாயமாக மதம் மாறச் சொல்லி வற்புறுத்துகிறார். அதுமட்டுமில்லாமல் பெண்களை பாலியல் தொல்லையும் செய்ய முற்படுகிறார். இதைப் பார்த்து கொந்தளித்த அரசரின் படை தளபதியான ஹீரோ ரிச்சர்ட் ரிஷி பொறுத்துக் கொள்ளாமல் சண்டை போடுகிறார்.

அதற்கு பிறகு என்ன நடந்தது? ஹீரோ செய்த சம்பவங்கள் என்ன? சுல்தான் ஆட்சி முடிவுக்கு கொண்டு வந்தாரா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. படத்தினுடைய முதல் பாதி எந்த வகையிலும் சலிப்பை ஏற்படுத்தாமல் நன்றாக சென்றிருக்கிறது. சில காட்சிகள் எல்லாம் விறுவிறுப்பையும் கொடுத்திருக்கிறது.
இரண்டாம் பாதியில் இயக்குனர் ட்விஸ்ட் வைத்திருக்கிறார்.

படத்தில் ஹீரோ ரிச்சர்ட் ரிசி சிறப்பாக நடித்திருக்கிறார். படம் முழுவதும் அவர் தன் தோளிலேயே சுமந்து சென்று இருக்கிறார் என்று சொல்லலாம். இவரை அடுத்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களுமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்திற்கு மிகப்பெரிய பலமே, பின்னணி இசை தான்.

இசை படத்தில் நல்ல சில காட்சிகளுக்கு உயிரோட்டத்தை கொடுத்திருக்கிறது என்று சொல்லலாம். சில காட்சிகள் செயற்கை தனமாக இருந்தாலும் படம் முழுவதும் இயக்குனர் விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார். ஏஐ, விபெக்ஸ் போர்ஷன்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. இயக்குனர் எடுத்துக்கொண்ட கதைக்களமும் அதை சிறப்பாக கொடுக்க முயற்சித்த விதமும் நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் திரௌபதி 2 எல்லோரும் சென்று பார்க்கும் படமாக தான் இருக்கிறது.

நிறை:

ரிச்சர்ட் ரிசி நடிப்பு

கதைக்களம்

முதல் பாதி விறுவிறுப்பாக இருக்கிறது.

பின்னணி இசை படத்திற்கு பக்கபலம்

கதாபாத்திரங்களின் தேர்வு

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கொடுத்திருக்கலாம்

மொத்தத்தில் திரௌபதி 2 - முயற்சி

Tamil Behind Talkies AMP · Quick view
View full