மெட்ராஸ் நாங்கதான்னு கூவுறீங்கா, அப்போ நாங்க யாரு - ரஞ்சித் பேச்சை விமர்சித்த மோகன் ஜி
ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவமாக இயக்குனர் ரஞ்சித்தை மறைமுகமாக விமர்சித்து மோகன் ஜி போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் ஆம்ஸ்ட்ராங் மரணம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த ஐந்தாம் தேதி சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார்.
இவரை வீட்டுக்கு அருகில் வெட்டி கொலை செய்தார்கள். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரையும் கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள். இதை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் இதுவரை 14 பேரை போலீஸ் கைது செய்திருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங் சம்பவம்:
இதில் திருவேங்கடம் என்பவரை கடந்த ஞாயிற்றுக்கிழமையை என்கவுண்டரில் போலீஸ் சுட்டுக் கொலை செய்திருந்தார்கள். பின் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையை தனிப்படை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். மேலும், இது தொடர்பாக விசாரணை நடந்து கொண்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பா. ரஞ்சித் அவர்கள் ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
பா.ரஞ்சித் சொன்னது:
இதில் இயக்குனர் பா.ரஞ்சித் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர், ஆம்ஸ்ட்ராங் அண்ணனை கொல்லப்பட்ட பிறகு முதலில் பாஜகவினர் இணையத்தில், ஆம்ஸ்ட்ராங் அண்ணனை ரவுடி என்று எழுதி இருந்தார்கள். அதற்குப் பிறகு ஒட்டுமொத்த திமுக உடைய ஐடியும் இணையத்தில் ஆம்ஸ்ட்ராங் அண்ணனை ரவுடி என்று எழுதியிருந்தார்கள். அண்ணனை ரவுடி என்று குறிப்பிட்டு எழுதிய அயோக்கியர்கள் யார்? இவர்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட அறிவு கிடையாதா? அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் எல்லாம் ரவுடிகள் என்றால் ஆமாம் நாங்கள் ரவுடிகள் தான்.
ஆம்ஸ்ட்ராங் குறித்து சொன்னது:
ஆம்ஸ்ட்ராங் படுகொலையை எளிதாக கடந்து செல்லலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். காவல்துறைக்கு சவால் விடுகிறேன், நாங்கள் போராடுவோம். இதை எளிதாக விடமாட்டோம். ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குப் பின்னால் இருக்கும் அயோக்கியர்களை கண்டுபிடிக்காத வரை நாங்கள் உங்களை சும்மா விடமாட்டோம். அறவழியில் போராடிக் கொண்டிருக்கும் எங்களை காயப்படுத்த வேண்டாம். ஆம்ஸ்ட்ராங் அண்ணா கொலை வழக்கில் மறைமுகமாக பல சூழ்ச்சிகள் இருக்கிறது.
என்னங்கடா இது. சினிமால வர்ற டயலாக் எல்லாம் மேடையில பேசுறீங்க.. எப்ப பார்த்தாலும் ரவுடி நாங்க தான், பத்து கேஸ் வாங்க போறது நாங்க தான், மெட்ராஸ் நாங்க தான்னு கூவுறீங்க.. நாங்க எல்லாம் யாருதான்டா அப்ப சென்னையில.. அடுத்தவன் வரலாற சினிமால மாத்தி சொன்னது பத்தாதுன்னு இப்ப மேடையில வேற pic.twitter.com/TPFm4bV2WI
— Mohan G Kshatriyan (@mohandreamer) July 20, 2024
மோகன் பதிவு:
அதை காவல்துறையினர் கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆவேசத்தில் பேசியிருந்தார். இப்படி பா. ரஞ்சித் பேசியிருந்தது இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக இயக்குனர் மோகன் ஜி அவர்கள் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், என்னங்கடா இது, சினிமாவில் வருகிற டயலாக்கை எல்லாம் மேடையில் பேசிறீங்க. எப்ப பார்த்தாலும் ரவுடி நாங்க தான், 10 கேஸ் வாங்க போறது நாங்க தான். மெட்ராஸ் நாங்க தான்னு கூவூறிங்க, நாங்கெல்லாம் யாரு தாண்டா? அப்ப சென்னையில் அடுத்தவன் வரலாற சினிமாவுல மாத்தி சொன்னது பத்தாதுன்னு இப்ப மேடையில வேறயா என்று விமர்சித்து பேசியிருக்கிறார்.