போலியான விஷமத்தனமான விமர்சனங்களை பரப்பி கடின உழைப்புமே வீணா போச்சு - மோகன் ஜி ஆதங்கம்
தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதோடு இவர் சாதி ரீதியிலான படங்களை தான் எடுத்து வருகிறார் என்ற முத்திரையும் குத்தப்பட்டு இருக்கிறது. தற்போது இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் திரௌபதி 2. இந்த படத்திலும் ரிச்சர்ட் ரிசி தான் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ரக்ஷனா இந்துசூடன் திரௌபதி தேவியாக நடித்திருக்கிறார்.
இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் திரௌபதி 2 படம் வெளியானபோது மங்காத்தா படத்தை ரீ ரிலீஸ் செய்திருந்தார்கள். இதனால் ரசிகர்கள் எல்லோருமே அஜித்தின் மங்காத்தா படத்தை தான் கொண்டாடி வந்தார்கள். மங்காத்தா படத்தின் உடைய வசூல் நல்ல அளவில் குவித்தது. இதனால் இது தொடர்பாக இயக்குனர் மோகன் ஜி வெளியிட்டுள்ள வீடியோவில், ஜனவரி 30 ஆம் தேதி தான் திரௌபதி 2 படத்தை வெளியிடலாம் என்று முடிவெடுத்தோம்.
திரௌபதி 2 படம்:
பொங்கலுக்கு ஜனநாயகன் படம் தள்ளி போனதால் தியேட்டர்கள் இருக்கும் என்று தேதியை நாங்கள் அறிவித்தோம். ஆனால், பொங்கலுக்கு கார்த்திக் சார் உடைய வா வாத்தியார் படம் வந்ததால் எங்களால் ஒண்ணுமே செய்ய முடியவில்லை. அதோடு திரௌபதி 2 படத்திற்காக பெரிய பெரிய ப்ரோமோஷன் எல்லாம் பண்ணோம். அதனால் திரௌபதி 2 படத்தை நாங்கள் தள்ளி போடாமல் 23ஆம் தேதி வெளியிட்டோம். மங்காத்தா படம் வரக்கூடாது என்றெல்லாம் நினைத்தோம். பொங்கலுக்கு ரொம்ப எதிர்பார்ப்பு இருந்தது.
மோகன் ஜி வருத்தம்:
மங்காத்தாவின் உடைய மிகப்பெரிய அலை கூட்டம், ரசிகர்களுடைய கொண்டாட்டத்தை ஒன்னும் செய்ய முடியவில்லை. திரையரங்குகள் கிடைக்கவில்லை. யாரும் உதவில்லை என்று எமோஷனலாக பேசி இருந்தார். இதை அடுத்து திரௌபதி 2 படம் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதாக மோகன் ஜி கூறி இருந்தார். அதுமட்டுமில்லாமல் இயக்குனர் மோகன் ஜி அவர்களை தியேட்டர்களுக்கு நேரில் சென்று மக்களிடம் கருத்து கேட்டு அதை வீடியோவாகவும் வெளியிட்டு இருந்தார்.
Is this right???
— Mohan G Kshatriyan (@mohandreamer) January 29, 2026
Spreading fake and venomous reviews on and setting a negative narrative in every YouTube channels in first day first show iteelf.. All Hardwork went in vein because of these faces 😔.. pic.twitter.com/4Lyq9xpeP5
மோகன் ஜி பதிவு:
இப்படி இருக்கும் நிலையில் மோகன் ஜி வைத்திருக்கும் குற்றச்சாட்டு பதிவு தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில் அவர், youtube சேனல்களில் திரௌபதி 2 படத்துக்கு விமர்சனம் சொன்ன சிலருடைய புகைப்படங்களை பதிவிட்டு, இது சரியா? முதல் நாள் முதல் காட்சியிலேயே எல்லா youtube சேனல்களிலும் போலியான மற்றும் விஷமத்தனமான விமர்சனங்களை பரப்பி எதிர்மறையான கதையை உருவாக்குகிறார்கள். இந்த முகங்களால் தான் எல்லாருடைய கடின உழைப்புமே வீணானது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.