உங்க தாத்தாவ திட்டி இருக்கிறது கூடவா தெரியல - பகாசுரன் படத்தை திரையிட உள்ள கலைஞர் டிவியை கேலி செய்த வலைப்பேச்சு. மோகன் ஜி பதிலடி.
தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
https://twitter.com/tnrags/status/1750098067263529354
இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இப்படி ஒரு நிலையில் இவர் பகாசூரன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் செல்வராகவன் நாயகனாக நடித்து இருக்கிறார். மேலும், நட்டி, ராதாரவி, vj லயா என்று பலர் நடித்து இருந்தனர். இந்த படமும் சுமாரான விமர்சனத்தை பெற்றது. இந்த படம் எந்த OTT தளத்திலும் வெளியாகாது இருந்த நிலையில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
https://twitter.com/mohandreamer/status/1750485664175702212
இதனை கேலி செய்து வலைப்பேச்சு குழு வீடியோ ஒன்றில் பேசி இருந்தனர். அதில் பேசிய அவர்கள்' பகாசுரன் படத்தை கலைஞர் டிவி வாங்கி இருப்பதை பலரும் கேலி செய்து வருகிறார்கள். அந்த படத்தில் கலைஞரை பயங்கரமாக சண்டை இழுத்து இருந்தனர். அந்தப் படத்தை வாங்கி தற்போது கலைஞர் டிவியில் போடப் போகிறார்கள். இவர்கள் எல்லாம் இந்த படத்தை பார்க்கிறார்களா இல்லையா எங்கள் தாத்தாவை நன்றாக திட்டி இருக்கிறீர்கள் போடுங்கள் என்று படத்தை வாங்கிப் போட்டார்கள் என்பது புரியவில்லை. பெரியாரைத் திட்டியது தான் தெரியவில்லை தற்போது தாத்தாவை திட்டியதை கூடவா தெரியவில்லை' என்று பேசி இருந்தனர்.
வளைசப்பேச்சு குழுவின் இந்த வீடியோவை பார்த்து டென்சனான மோகன் ஜி 'ஏன்டா மூதேவிங்களா. நீங்க தான் என்னோட எந்த படத்தையும் பார்க்க மாட்டீங்களே..அப்புறம் எதுக்கு அதை பத்தி பேசிகிட்டு. எவன் எவளை வச்சி இருக்கான்னு புரளியை பேசிட்டு வயித்த கழுவாம உங்களுக்கு எதுக்குடா இந்த பொழப்பு. இதில் இவர்கள் கூறியுள்ள செய்தியில் துளியும் உண்மையல்ல.. வெறும் உருட்டு' என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
பகாசுரன் படத்தை தொடர்ந்து மோகன் ஜி ரிச்சர்டு ரிஷியின் படத்தைப் பகிர்ந்து, ''சில மீடியாக்களுக்கு.. இவரு யாருன்னு தெரியுதா.. காசி கங்கா ஆர்த்தியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.. எல்லா கடவுள்களையும் வணங்குபவர் ரிச்சர்டு ரிஷி சார்.. நீங்களா ஏதாவது கிளப்பி விடாதீங்க.. அப்பறம் முக்கியமான செய்தி.. என்னோட அடுத்த படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் சார் தான். அறிவிப்பு விரைவில்...என்று' குறிப்பிட்டு இருந்தார்.