'துணிவு' பர்ஸ்ட் வெளியாகும் முன்பாக போனி கபூரிடம் தன் படத்திற்காக மோகன் ஜி வைத்த வேண்டுகோள்.
அஜித்தின் ஏகே 61 பட தயாரிப்பாளருக்கு இயக்குனர் மோகன் ஜி வைத்திருக்கும் வேண்டுகோள் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசாகி இருந்தது.
இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார். அஜித்தின் வலிமை படம் வசூலில் வாரி இறைத்து இருந்தது என்று படத்தின் தயாரிப்பாளரே அறிவித்து இருந்தார். தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். இந்த படம் பல மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கின்றனர்.
ஏகே 61 படம்:
இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதால் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார். அதற்கான புகைப்படங்கள் செய்து வெளியாகி இருந்தது. அஜித் இந்த படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்திருக்கிறார். மலையாள நடிகை மஞ்சுவாரியர் அஜித்துக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்கிறார்.
பகாசுரன் படம்:
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று தான் வெளியாகி இருந்தது, இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூருக்கு இயக்குனர் மோகன் ஜி அவர்கள் ட்விட்டரில் வேண்டுகோள் ஒன்றுவைத்திருந்தார். அதாவது, மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் பகாசுரன். இந்த படத்தில் நட்டி நடராஜனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
பகாசுரன் பாடல் ரிலீஸ்:
மேலும், இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் இன்று மாலை ரிலீஸ் ஆகி இருந்தது. இன்று வெளியான சிவ சிவாயம் என்ற பாடலை சாம் சிஎஸ் இசை அமைத்து இருக்கிறார். இந்த பாடலின் கிளிம்ப்ச் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி இருந்தது. அதுமட்டுமில்லாமல் அஜித் நடித்து வரும் ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாக இருக்கிறது.
இயக்குனர் மோகன் ஜி டீவ்ட்:
இதனால் இயக்குனர் மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ஏகே 61 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு எப்போது என்று சொல்லுங்கள் போனிகபூர் சார். அதன்படி நானும் என்னுடைய சிவ சிவாயம் பாடல் ரிலீஸ் தேரத்தை மாற்றிக் கொள்கிறேன். ஒரே நேரத்தில் இரண்டு ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று கூறியிருந்தார். இப்படி மோகன் ஜி பதிவிட்ட பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.