தான் இயக்கிய முருகன் பக்தி பாடலை கேலி செய்த நபர்- மோகன் ஜி கொடுத்த பதிலடி
தனது பாடலை கேலி செய்தவருக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகிய வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். 'பழைய வண்ணார்பேட்டை' என்ற படத்தின் மூலம் தான் மோகன் ஜி இயக்குனராக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இவர் திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.
எனது உருவாக்கத்தில்,
— Mohan G Kshatriyan (@mohandreamer) January 24, 2025
அல்ருபியான் இசையில், மோகன்ராஜ் B வரிகளில், MLR கார்த்திகேயன் அவர்களின் குரலில், #பாதயாத்திரை என்ற தலைப்பில் தயாராகியுள்ள "அரோகரா முருகா" என்ற பாடலை சிவ குரு, ஐயா சிவ தாமோதரன் அவர்கள் வெளியிட்டார்.. 06:03 மணிக்கு பாடலின் லிங்க் இங்கே பகிரப்படும்.. 1/2 pic.twitter.com/imY70HX0L1
இந்நிலையில் தற்போது மோகன் ஜி அவர்கள் முருகன் பக்தி பாடல் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர், எனது உருவாக்கத்தில், அல்ருபியான் இசையில், மோகன்ராஜ் B வரிகளில், MLR கார்த்திகேயன் அவர்களின் குரலில், 'பாதயாத்திரை' என்ற தலைப்பில் தயாராகியுள்ள "அரோகரா முருகா" என்ற பாடலை சிவ குரு, ஐயா சிவ தாமோதரன் அவர்கள் வெளியிட்டார்.
மோகன் ஜி உருவாக்கிய பாடல்:
மேலும், தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகரை வணங்க பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு சமர்ப்பணமாக இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.. ஏற்கனவே சிவனுக்கு, சிவ சிவாயம் என்ற பாடலும், தற்போது முருகனிடம் பாதயாத்திரை என்ற பாடலும் மேலும் பல பக்தி பாடல்கள் தொடர்ந்து உருவாகும் என்று தான் இயக்கிய பாடலின் லிங்கை பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து மோகன் ஜி யின் பக்தி பாடலை கேட்டுவிட்டு இணையவாசி ஒருவர், 'பாட்டு மயிர் மாதிரி இருக்குடா'.
பாட்டு மயிர் மாதிரி இருக்குடா....
— Schumy Vanna Kaviyangal (@Schumy_Official) January 24, 2025
படம் தான் சுவாரசியமா எடுக்க தெரியல..பாட்டு கூடவா எடுக்க தெரியல..
சுத்தி இருக்கவன் சூப்பர் அருமைனு Post போடுறான்னு நம்பாத..பாட்டு மயிரு மாதிரி இருக்கு..உனக்குள்ள ஒரு கலை பும்தையும் இல்ல.. சினிமா எடுக்குறேன் பாட்டு எடுக்குறேன்னு பணத்த வீண் பண்ணாமா… https://t.co/iXPd1DSPIW
கேலி செய்த நபர்:
படம் தான் சுவாரசியமா எடுக்க தெரியல..பாட்டு கூடவா எடுக்க தெரியல. சுத்தி இருக்கவன் சூப்பர் அருமைனு Post போடுறான்னு நம்பாத. பாட்டு மயிரு மாதிரி இருக்கு. உனக்குள்ள ஒரு கலையும் இல்ல. சினிமா எடுக்குறேன் பாட்டு எடுக்குறேன்னு பணத்த வீண் பண்ணாமா சுகுனா சிக்கன் ஏஜென்சி எடுத்து "சில்லி சிக்கன் & Fried ரைஸ் கடை போட்டு பணத்த சம்பாதிக்குற வழிய பாரு. அதான் உனக்கு இயல்பா வரும். இத Demotivate -ஆ எடுத்துக்காத.
மோகன் ஜி பதிலடி:
உனக்கு உண்மையிலயே ஒன்னும் வரல. சிக்கன் கடை போடு..நல்லா போகும்..புரிஞ்சிக்க..டைம் வேஸ்ட் பண்ணாத' என்று கேலி செய்து பதிவிட்டிருந்தார். தற்போது தனது பக்தி பாடலை கேலி செய்தவருக்கு இயக்குனர் மோகன் ஜி பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளார். அதில், நீ இவ்வளவு நாகரீகமா கருத்து சொல்லி இப்பதான் பாக்குறேன்.. நன்றி டா.. பாதயாத்திரை போ ஒரு தடவை.. நல்ல புத்தி வரும்..என்று கூறியுள்ளார்.
நீ இவ்வளவு நாகரீகமா கருத்து சொல்லி இப்பதான் பாக்குறேன்.. நன்றி டா.. #பாதயாத்திரை போ ஒரு தடவை.. நல்ல புத்தி வரும்.. https://t.co/mP9DAyTSGd
— Mohan G Kshatriyan (@mohandreamer) January 25, 2025
மோகன் ஜி குறித்து:
இயக்குனர் மோகன் ஜி எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர். சினிமா குறித்தும், சமுதாயப் பிரச்சினைகள் குறித்தும் தனது வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கூட, திருப்பதி லட்டு சர்ச்சை குறித்த பேட்டியில், பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலப்பதாக பேசி பல சர்ச்சைகளில் சிக்கி போலீசால் கைது செய்யப்பட்டார். பின், மோகன்ஜி அவர்கள் அப்படி பேசியதற்காக மன்னிப்பு கேட்டு வீடியோவும் பகிர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.