விடுதலை படத்திற்கு மோகன் ஜி கொடுத்த விமர்சனம் - ரசிகர்களின் கமண்டுகள் இதோ.

By Arun · 31/3/2023

விடுதலை படம் குறித்து இயக்குனர் மோகன் பதிவிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் விடுதலை. இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார்.படத்தில் மலைப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு கனிம வளங்கள் நிறைய கிடைக்கிறது. இந்த கனிம வளங்களை எடுத்துக் கொள்ள தனியார் நிறுவனத்திற்கு அரசாங்கம் அனுமதி கொடுக்கிறது.

இதற்கான வேலைகளில் அந்த தனியார் நிறுவனமும் ஈடுபட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த கனிம வளங்களை எடுக்கக்கூடாது என்று மக்கள் எதிர்த்து போராடுகின்றனர். இதனால் தங்கள் இடமும் பறிபோய் விடும் என்று பயப்படுகிறார்.இந்த போராட்டத்தின் தலைவனாக விஜய் சேதுபதி இருக்கிறார். வழக்கம்போல் மக்கள் போராட ஆரம்பித்தால் அவர்களை அடக்கி ஒடுக்க வன்முறையை போலீஸ் கையில் எடுக்கிறது. இரக்கமில்லாமல் போலீஸ் மக்களிடம் நடந்து கொள்கிறார்கள்.

இந்த இரக்கமற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு மத்தியில் இரக்கமுள்ள கான்ஸ்டபில் ஆக நடிகர் சூரி இருக்கிறார். இவர் மக்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்கிறார்? மக்களின் இந்த போராட்டம் வெற்றி பெற்றதா? இறுதியில் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படத்திற்கு நல்ல விமர்சங்கள் கிடைத்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு மோகன் ஜி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் 'விடுதலை பார்ட் 1 Goosebumps' என்று பதிவிட்டுள்ளார். மோகன் ஜியின் இந்த பதிவை சிலர் வரவேற்கும் நிலையில் ஒரு சிலர் உங்களுக்கு ஏன் இந்த வேலை என்று விமர்சித்தும் வருகின்றனர். அதற்கு முக்கிய காரணமே மோகன் ஜி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஆதரவாகவே ஜாதிப்படங்களை எடுக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் தான். சமீபத்தில் கூட மோகன் ஜி பகாசுரன் படத்தை இயக்கி இருந்தார்.

இந்த படத்தின் ப்ரோமஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் ' இந்த சமூகத்தில் நடந்த விஷயத்தை நான் படமாக எடுத்தேன். மாம் எடுத்த கதை தான் எனக்கு அப்படி ஒரு அடையாளத்தை கொடுத்தது. நான் ஜாதி பார்ப்பவன் கிடையாது. ஜாதி இருக்கிறதா என்றால் இருக்கிறது இதைத்தானே வெற்றிமாறன் சாரும் கொஞ்சம் நாட்களுக்கு முன்னால் பேசியிருந்தார். ஜாதி இருக்கிறது எனக்கு வேண்டாம் என்று அவர் சொல்கிறார்.நான் சொல்லும் போது என்னை திட்டினார்கள் ஆனால் வெற்றிமாறன் சார் சொன்னாள் பாராட்டுகிறார்கள் இங்கே யார் சொல்கிறார்கள் என்பது தான் முக்கியம் இங்கு நான் சொன்னால் திட்டுவார்கள் அவர்கள் சொன்னால் பாராட்டுவார்கள் அவ்வளவு தான் வித்தியாசம்' என்று கூறி இருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full