முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக ருத்ரதாண்டவம் படம் வசூலை அள்ளி தருகிறது என்று படக்குழுவினர் சந்தோஷத்தில் திக்கு முக்காடி உள்ளார்கள் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. திரௌபதி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் ருத்ரதாண்டவம். இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்து உள்ளார். இரண்டாவது முறையாக இந்த படத்தில் மோகன், ரிச்சர்ட் இந்த படத்தில் இணைந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக சின்னத்திரை சீரியல் நடிகை தர்ஷா குப்தா நடித்து உள்ளார்.

வில்லன் கதாபாத்திரத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் மிரட்டி உள்ளார். போதை பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டது தான் ருத்ரதாண்டவம் படம். இன்றைய சமுதாயத்தில் நிலவும் சாதி பிரச்சனைகளையும், போதைக்கு அடிமையாகும் இளைனர்கள் நிலைமை குறித்தும் இயக்குனர் அழகாக எடுத்து சொல்லி இருக்கிறார்.

Advertisement

மேலும், இந்த படம் அக்டோபர் 1ம் தேதி திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பல சினிமா பிரபலங்கள் இந்த படம் குறித்து பாராட்டுகளை குவித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படம் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக வசூலில் வாரிக் குவித்து வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த படம் முதல் மூன்று நாட்களிலேயே 7.5 கோடி வரை வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக ருத்ர தாண்டவம் படம் மக்கள் மத்தியில் ஆதரவு பெற்று வருவதால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர் என்ற தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement