விஜயை கூத்தாடி என்று விமர்சித்த ஷானவாஸ் - திருமாவை சீண்டிய மோகன் ஜி
நடிகர் விஜய்க்கு ஆதரவாக இயக்குனர் மோகன் ஜி போட்டிருக்கும் பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். அம்பேத்கரின் ஆளுமையின் அத்தனை பரிமாணங்களையும் பேசும் முழுமையான தொகுப்பு நூல், ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’. இந்த நூலை விகடன் பிரசுரமும், வாய்ஸ் ஆப் காமன் நிறுவனமும் இணைந்து வெளியிட்ட இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா, அம்பேத்கரின் நினைவு தினமான நேற்று சென்னையில் நடைபெற்றது.
https://www.youtube.com/watch?v=IaxQWtHMwW8
மேலும், இந்த விழாவில் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் பா சீனிவாசன் வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியை தொடங்கினார். அதைத்தொடர்ந்து, ‘ எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தகத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட, சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே சந்துரு, அம்பேத்கரின் பேரனும், சமூகச் செயல்பாட்டாளர் ஆனந்த் டெம்டும்டேவும் இந்தப் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டனர். முதலில் விசிக தலைவர் திருமாவளவனும் இந்த நிகழ்ச்சியில்கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை.
விஜய் பேசியது:
பின், நிகழ்ச்சியில் பேசிய விஜய், 'விசிக தலைவர் தொல் திருமாவளவனால் இன்று வர முடியாமல் போனது. அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவிற்குக் கூட அவரால் கலந்து கொள்ள முடியாத அளவிற்குக் கூட்டணிக் கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் இருக்கும் என என்னால் யூகிக்க முடிந்தாலும், நான் இப்போது சொல்கிறேன். அவரின் மனம் முழுக்க இன்று நம்மோடு தான் இருக்கும்.' என்று பேசியிருந்தார். இதுபோல் விஜய் பேசியது திமுகவை தான் என்று தெள்ளத்தெளிவாக அனைவருக்கும் தெரிந்தது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படி மிதிச்சா தான் அரசியல்னா என்னனு தற்குறி முண்டம் விஜய் க்கு புரியும்...
— தமிழன் குணா (@gunapersonnel) December 7, 2024
ஆளூர் ஷாநவாஸ் 🔥🔥👏#விஜய்_தற்குறி_கழகம் pic.twitter.com/ejaQje3QTs
விஜய்க்கு பதில் அளித்த திருமா:
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், புத்தக வெளியீட்டு விழாவில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அழுத்தம் என்ற கருத்தை விஜய் பதிவு செய்திருக்கிறார். ஆனால், அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அப்படி எந்த அழுத்தமும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன். அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்க கூடிய அளவுக்கு நானும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பலவீனமாக இல்லை என்பதை நான் இப்போது பதிவு செய்ய விரும்புகிறேன்.
விஜய்யை விமர்சித்த ஆளூர் ஷாநவாஸ்:
அதோடு இந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்காமல் போனதற்கு, விஜய் அவர்கள் காரணம் இல்லை. அவருக்கும் எங்களுக்கும் எந்த விதமான சிக்கலும் இல்லை என்று கூறியிருக்கிறார். ஆனால், திருமாவளவனை விஜய் விமர்சித்ததால் விசிக கட்சியினர் கொந்தளித்து இருக்கின்றனர். சூழல் எப்படி இருக்க விசிகவை சேர்ந்த ஆளூர் ஷாநவாஸ், தனியார் ஊடகம் ஒன்றில் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். அப்போது, 'எங்கள் தலைவர் திருமாவளவன் அறிவார்ந்த தலைவர். 35 வருடங்களாக அவரை பிரஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் எழுதி வைத்துக்கொண்டு படித்தார் என்று யாராவது வந்து சொல்ல சொல்லுங்கள்.
கூத்தாடி.. எவ்வளவு திமிர் இவருக்கு.. இவர் வகிக்கும் கட்சி தலைவரே ஒரு படத்துல கூத்தாடி வேஷம் போட்டவரு தான்.. இந்த வார்த்தைக்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் ஷானவாஸ் அவர்கள்.. இது திரை நடிகர்களை மட்டுமல்ல, நம் கிராமத்து கூத்து கலைஞர்களையும் இழிவு படுத்தும் வார்த்தை.. https://t.co/5YtW8Ep7Z1
— Mohan G Kshatriyan (@mohandreamer) December 7, 2024
மோகன் ஜி பதிவு :
நேத்து வந்த 'கூத்தாடி' அவரை இப்படி பேசலாமா என்று விஜய்யை விமர்சித்து இருந்தார். இந்நிலையில் தற்போதைய இயக்குனர் மோகன் ஜி இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், 'கூத்தாடி.. எவ்வளவு திமிர் இவருக்கு.. இவர் வகிக்கும் கட்சி தலைவரே ஒரு படத்துல கூத்தாடி வேஷம் போட்டவரு தான்.. இந்த வார்த்தைக்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் ஷானவாஸ் அவர்கள்.. இது திரை நடிகர்களை மட்டுமல்ல, நம் கிராமத்து கூத்து கலைஞர்களையும் இழிவு படுத்தும் வார்த்தை..' என்று பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் இவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.