'பசுமைத்தாயகம்' என்று குறிப்பிட்டு ராமதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்ட மோகன் ஜி.

By Rajkumar · 25/7/2023

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனை தொடர்ந்து மோகன் ஜி, செல்வராகவனை வைத்து பகாசூரன் படத்தை இயக்கி இருந்தார். மோகன் ஜியின் முந்தைய திரைப்படம் போல இந்த திரைப்படமும் சமூக அக்கறை கொண்ட ஒரு படமாகவே எடுக்க முயற்சி செய்து இருந்தார் மோகன். மேலும், இந்த படத்தின் சமூக வலைதளத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை, பாலியல் தொழிலில் பெண்கள் எப்படி சிக்குகின்றனர் போன்ற விஷயங்களை பேசி இருந்தார் மோகன்.

இதனை தொடர்ந்து மோகன் மீண்டும் ரிச்சர்டை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். மேலும், மோகன் ஜி ஒரு குறிப்பிட்ட ஜாதியை குறி வைத்தே படம் எடுக்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்துகொண்டு தான் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் மோகன் ஜி, பா ம க கட்சி தலைவர் ராமதாஸ் அவர்களின் தீவிர தொண்டன் என்பதால் தான். மோகன் ஜி அடிக்கடி ராமதாசை சந்தித்து இருக்கிறார்.

மேலும், ராமதாசும் மோகன் ஜிக்கு பல முறை வாழ்த்துக்களை கூறி இருக்கிறார். மோகன் ஜியின் திருமண நாளைக்கு கூட ராம்தாஸ், மோகன் ஜியை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை கூறி இருந்தார். அந்த ஆடியோவை கூட மோகன் ஜி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ராமதாசுக்கு மோகன் ஜி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோகன் 'மக்கள் காவலர் மருத்துவர் அய்யாவின் 85வது பிறந்தநாள் இன்று... பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா' என்று பதிவிட்டு DrRamadossAyya85 #மருத்துவர்அய்யா85 #PasumaiThaayagam போன்ற ஹேஷ் டேக்குகளையும் பதிவிட்டுள்ளார். மோகன் ஜியின் இந்த பதிவு வைரலாகி வருகிறது. மேலும், ராமதாஸ் அவர்களுக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full