சோபா, சில்க் ஸ்மிதா ரெண்டு பேரும் தங்கமான பொண்ணுங்க - மறைந்த தோழிகள் பற்றி மோகன் உருக்கம்
பிரபல நடிகர் மோகன், திரைத் துறையில் மிகவும் நல்ல தோழிகளாக இருந்த நடிகை சோபா மற்றும் சில்க் ஸ்மிதா பற்றி பகிர்ந்த தகவல்கள்தான் வைரலாகியுள்ளது. தமிழ் சினிமாவின் 80, 90 காலகட்டங்களில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் மோகன். இவரது நடிப்பின் மூலம் தனக்கு என்ற ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமா உலகில் கொடி கட்டி பறந்தவர் மோகன். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் சக்கை போடு போட்டுக் கொண்டு நடித்தார்.
இவரை எல்லோரும் 'மைக் மோகன்' என்றுதான் அழைப்பார்கள். இவர் ஒரு நாளிற்க்கு 18 மணி நேரம் நடிப்பிலேயே நேரத்தை செலவிடுவார். மேலும், மோகனின் படம் என்றாலே நிச்சயம் வெற்றி விழா கொண்டாடும் அளவிற்கு ஓடுமென்று எல்லோரும் பேசுவார்கள். இப்படி எல்லா விதத்திலும் சிறந்து விளங்கிய மோகன், ஒரு நடிகை அவரை பற்றி பொய்யாக சொன்ன வதந்தியால் அப்படியே அவருடைய வாழ்க்கை பாதை மாறிவிட்டது. தற்போது தமிழ் சினிமாவில் 14 ஆண்டுகள் கழித்து 'ஹரா' படத்தின் மூலம் மோகன் மீண்டும் 'ரீ என்ட்ரி' கொடுத்திருக்கிறார்.
ஹரா படம்:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஹரா ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் லீட் ரோலில் நடித்தார் நடிகர் மோகன். ஜூன் ஏழாம் தேதி வெளியான அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தி கோட்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் மோகன்.இதுபோல் ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகர் மோகன் சமூக வலைதளத்தில் நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார்.
மோகன் பேட்டி :
அந்த வகையில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் அவரின் திரைப்பயணம், அனுபவம் குறித்து பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து உள்ளார். அந்த வகையில் தனக்கு சினிமா துறையில் மிகவும் நல்ல தோழிகளாக இருந்து, சோகமான முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட நடிகை சோபா மற்றும் நடிகை சில்க் ஸ்மிதா பற்றி மோகன் பேசி உள்ளார். 1980 ஆம் ஆண்டு இயக்குனர் பாலு மகேந்திர இயக்கிய 'மூடுபனி' படத்தில் மோகன் மற்றும் ஷோபா நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .
ஷோபா குறித்து :
சினிமா துறையில் நான் நுழைந்ததும் எனக்கு கிடைத்த மிக நல்ல தோழி 'ஷோபா'. நாங்க இரண்டு பேரும் சேர்ந்து சிரிச்சு சிரிச்சு நடிச்ச சீன் ஒன்று இருக்கிறது. கன்னடத்தில் 'அவர்ச்சிதா'என்ற படத்தில் நான் ஷோபாவை பாலியல் வன்கொடுமை செய்வது போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். அந்த காட்சியில் நடிக்கும் போது நாங்கள் இருவரும் சிரிச்சுக்கிட்டே இருந்ததால இயக்குனர் காசிநாத் எங்களை திட்டிக் கொண்டே இருந்தார் என்று மோகன் கூறினார்.
https://www.youtube.com/watch?v=uWTXx4HmXJk
சில்க் ஸ்மிதா குறித்து:
மேலும் அவர், சோபா தன்னடக்கமான நல்ல பொண்ணு. மனசுல எதுவுமே வச்சுக்க மாட்டார். அவருடைய குடும்பத்துடனும் நான் நன்றாக பழகி இருக்கிறேன். யாரும் எதிர்பாராத வகையில் ஒரு நல்ல தோழியை நான் இழந்து விட்டேன். சோபாவை போலவே எனக்கு மிக நல்ல தோழியாக இருந்தவர் நடிகர் சில்க் ஸ்மிதா. அவங்களும் ரொம்ப நல்ல பொண்ணு பழக கூட மிகவும் இனிமையானவர். அவருடன் பேசவும் பழகும் எந்த ஒரு தயக்கமும் இருக்காது. அவருடைய இழப்பும் எனக்கு மிகப்பெரிய இழப்பு என்று சோகத்தோடு கூறினார் மோகன்.