மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலில் Bmw cycle ரைட் வீடியோ - சைக்கிளின் விலை கேட்டா ஆடிப் போவீங்க.

By Arun · 28/11/2021

மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் மோகன்லால். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். இவர் பெரும்பாலும் மலையாள மொழி திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார். இவர் இதுவரை 5 முறை தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார். இவர் முதன்முதலில் 1978 ஆம் ஆண்டு வந்த "திறநோட்டம்" என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=uMwJBEfSZW0

இந்நிலையில் நடிகர் மோகன்லாலின் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் மோகன்லாலுக்கு சைக்கிளிங் பண்ணுவது ரொம்ப பிடித்தமான விஷயம். சினிமாவில் பிசியாக இருப்பதால் இவரால் சைக்கிளிங் பண்ண முடியாமல் போனது. அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் இவர் சைக்கிளிங் பண்ணாமல் இருந்தார். அப்படி இவர் சைக்கிளிங் பண்ண விரும்பினால் அதிகாலை, மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் தன் நண்பர்களுடன் சைக்கிள் பண்ணுவாராம்.

இதற்காகவே பிரத்தியோகமாக பிஎம்டபிள்யூ எம் ரக சைக்கிளை மோகன்லால் வாங்கி வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மோகன்லாலுக்கு திருவனந்தபுரம் ரொம்ப பிடித்த நகரமாம். மேலும், அங்கு இவருக்கு ஏராளமான நண்பர்களும் இருக்கிறார்கள். அதோடு திருவனந்தபுரத்திற்கு மோகன்லால் சென்றால் காலை 4 மணியளவில் சென்று அங்கு தனக்கு பிடித்தமான பிஎம்டபிள்யூ சைக்கிளில் நகரை சுற்றி வருவார். அப்படி மோகன்லால் சைக்கிளில் சைக்கிளிங் செய்த வீடியோ ஒன்றை அவருடைய நண்பர் ஒருவர் வெளியிட்டிருக்கிறார்.

தற்போது மோகன்லாலுக்கு 61 வயதாகிறது. இந்த வயதிலும் மோகன்லால் சுறுசுறுப்பாக சைக்கிளிங் செய்திருக்கிறார். இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி தரும் என்று சொல்லலாம். மேலும் , இந்த பிஎம்டபிள்யூ சைக்கிளிங் 2014 ஆம் ஆண்டு தான் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இது 16.8 கிலோ எடை கொண்ட லேட்டஸ்ட் மாடல். இதனுடைய விலை 1. 60 லட்சம் என்று கூறப்படுகிறது. மோகன்லாலின் சைக்கிளிங் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அது மட்டுமில்லாமல் மோகன்லாலின் மரைக்காயர் படம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாக இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி கொண்டிருக்கின்றனர்.

இந்திய கடற்படை எல்லையில் முதன்முறையாக கடற்படை பாதுகாப்பை உருவாக்கி அறியப்படும் குன்ஹாலி மரைக்காயர் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் மோகன்லாலுடன் கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜுன், மஞ்சுவாரியர், கல்யாணி பிரியதர்ஷன், மோகன்லாலின் மகன் பிரணவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை பிரியதர்ஷன் இயக்கி இருக்கிறார். இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

behindtalkies AMP · Quick view
View full