ஊரடங்கால் நின்று போன போக்கு வரத்து. மகனை அழைத்து வர 1400 கி.மீ தனியாக சென்றுள்ள 50 வயது தாய்.

By Rajkumar · 10/4/2020

இந்தியாவில் கொரோனாவினால் 6412 பேர் பாதிக்கப்பட்டும், 199 பேர் பலியாகியும் உள்ளனர். இதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்துக்கு, கடைகள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. போக்குவரத்து வசதிகள் இல்லாததால் பல பேர் தங்களுடைய குடும்பங்களை விட்டு வெவ்வேறு இடங்களில் மாட்டி கொண்டு தவித்து வருகிறார்கள்.
ஊரடங்கு உத்தரவால் சிலர் வீடுகளுக்குள் பாதுகாப்பாக, சுகமாக இருந்தாலும் பலர் வெளியே மாட்டி கொண்டு தவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் ஆந்திராவில் இருந்த தன் மகனை அழைத்து வர அவரது தாயார் 1400 கிலோ மீட்டர் தூரத்துக்கு சைக்கிள் ஓட்டிய சம்பவம் தற்போது சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மருத்துவம் படித்து வரும் மாணவன் தான் முகமது நிஜாமுதீன். முகமது நிஜாமுதீன் கடந்த மார்ச் 12-ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் நெல்லூரில் உள்ள தன் நண்பரின் வீட்டுக்குச் சென்று உள்ளார்.

பின் இவர் நிசாமாபாத்தில் உள்ள தன் வீட்டுக்கு மார்ச் 23-ஆம் தேதி திரும்பி வருவதற்கு ரயிலில் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாடே கொரோனாவினால் கொந்தளித்து இருப்பதால் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து போக்குவரத்து வசதிகளும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.

மேலும், ஏப்ரல் 5-ஆம் தேதி வரை வீடு திரும்ப முடியாமல் மகன் முகமது நிஜாமுதீன் தவிப்பதை அறிந்தார் அவரது தாயார் ராசியா பேகம். பின் அவர் தனது இருசக்கர வாகனத்தை(சைக்கிள்) எடுத்துக் கொண்டு சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெல்லூருக்கு புறப்பட்டு உள்ளார். பைக் சைக்கிளில் சுமார் ஒன்றரை நாட்கள் பயணித்து தன் மகனின் இருப்பிடத்திற்கு சென்றார்.

பிறகு தாயார் ராசியா பேகம் அங்கிருந்து தன் மகன் முகமது நிஜாமுதீன் உடன் மீண்டும் தங்களுடைய நிசாமாபாத்துக்கு திரும்பியுள்ளார். திருமணம் முடிந்த சில ஆண்டுகளிலேயே ராசியா பேகம் தனது கணவரை இழந்து விட்டார். பிறகு மகன் தான் தனக்கு உலகம் என்று வாழ்ந்து வருகிறார். ராசியா பேகம் அவர்கள் தன் உடல்நிலையை பற்றி கூட கவலைப்படாமல் 1400 கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகனம் ஓட்டிய நிகழ்வு தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. தாய் உள்ளத்தின் அன்பை பார்த்து பலரும் நெகிழ்ந்து போய் விட்டார்கள்.

கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழ்நிலையில் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். இந்த நிலைமையில் அரசாங்கம் கூறும் அறிவுரை கேட்டு வீட்டிலேயே மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமான ஒன்று. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வரவேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும், கொரோனா விழிப்புணர்வு குறித்து பல பிரபலங்கள் சோசியல் மீடியாவில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

behindtalkies AMP · Quick view
View full