சினிமா உலகில் பலர் நடிகர்கள் முதலில் வெவ்வேறு குணசித்திர வேடங்களில் நடித்த பின்னரே நடிகர்களாய் நடிக்க தொடங்கினர். அந்த வரிசையில் நடிகர் மொட்டை ராஜேந்திரன் முதலில் சினிமா உலகிற்கு ஸ்டண்ட் மேனாகத் தான் அறிமுகமானார். இவர் ஜூன் 1 ல் 1957 ல் தூத்துக்குடியில் பிறந்தவர்.இவர் தனது சினிமா பயணத்தை ஸ்டண்ட் மேன் ஆக தொடங்கினார். இவர் பல்வேறு நடிகர்களுக்கு டூப் போட்டு தான் நடித்தவர். இவர் நடித்த முதல் படம் 1992 ல் வெளியான திருமதி பழனிச்சாமி தான்.இந்த படத்தில் வில்லனாக நடித்துருப்பார். பின்னர் சிறு சிறு காமெடி வேடங்களில் நடிக்க தொடங்கினார்.

Advertisement

சொல்லப்போனால் மொட்டை ராஜேந்திரன் பெயர் நம் அனைவருக்கும் சற்று பரிட்சயமான பெயர் தான். அதன் பிறகு மொட்டை ராஜேந்திரனை நடிகராய் அறிமுகம் செய்தவர் இயக்குனர் பாலா தான் . நான் கடவுள் படத்தின் மூலம் இவர் வில்லனாக அறிமுகமானவர். இப்படம் இவருக்கு பெரும் மதிப்பையும் பெயரும் பெற்றுதந்தது. பின்னர் அவருக்கு படத்தில் காமெடி வில்லன் கதாபாத்திரம் நன்றாக வொர்க் அவுட் ஆனது. மேலும், நடிகர் மொட்டை ராஜேந்திரன் கடந்த சில வருடங்களாக பல படங்களில் லீடிங் காமெடியனாகவே வலம் வருகிறார்.

காமெடியானக தமிழில் பட்டத்துயானை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ,ராஜா ராணி ,டார்லிங் போன்ற படங்களின் மூலம் தனது காமெடி திறமையை வெளிப்படுத்தி உள்ளார். சமீபகாலமாகவே மொட்டை ராஜேந்திரன் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்று பேச்சு அடிபட்டது. இந்நிலையில் அறிமுக இயக்குனர் கார்த்திக் பழனியப்பன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் மொட்ட ராஜேந்திரன் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்து போய் உள்ளார்கள். அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் வில்லன், காமெடி என பல கெட்டப்பில் நடித்து உள்ளார் நடிகர் மொட்ட ராஜேந்திரன் .

Advertisement

ஆனால், மொட்ட ராஜேந்திரன் அவர்கள் சினிமா உலகில் ஹீரோவாக அவதாரம் எடுக்கப்பது இதுவே முதல்முறை . கார்த்திக் பழனியப்பன் இயக்கும் படம் தான் ‘ராபின்ஹுட்’. இந்த படத்தில் தான் மொட்ட ராஜேந்திரன் ஹீரோவாக களம் இறங்குகிறார். அசுரன், ராட்சசன் படங்களில் நடித்த அம்மு அபிராமி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சோசியல் மீடியாவில் மொட்ட ராஜேந்திரன் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Advertisement
Advertisement