அட பாவத்தா, வில்லன் முதல் காமெடியன் வரை கலக்கிய மொட்ட ராஜேந்திரனுக்கு இப்படி ஒரு நிலையா.

By Arun · 5/8/2022

பட வாய்ப்பு இல்லாமல் நடிகர் மொட்டை ராஜேந்திரன் தவித்து வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடூர வில்லனாக இருந்தவர்கள் பொன்னம்பலம், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான். தற்போது இவர்கள் காமெடியனாக நடித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது காமெடியியிலும், வில்லன் வேடத்திலும் தமிழ்த்திரையுலகை கலக்கி வருபவர் மொட்டை ராஜேந்திரன்.

எப்பொழுதுமே மொட்டை தலை, கரகரவென்ற தனித்த குரல் இதான் மொட்டை ராஜேந்திரனின் அடையாளம். ஆரம்ப காலத்தில் மொட்டை ராஜேந்திரன் ஆரம்பத்தில் ஒரு டூப் மேனாக தான் சினிமாவில் பணியாற்றி வந்தார். இவர் சினிமாவில் தோன்றும் முன்னரே பல படங்களில் ஸ்டாண்ட் காட்சிகளுக்கு டூப் போட்டு இருந்துள்ளார். அதன் பின்னர் தான் இவர் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக தான் பணிபுரிந்து இருந்தார். அப்படியே படங்களில் இவர் சிறுசிறு வேடங்களில் நடித்தார்.

மொட்டை ராஜேந்திரன் திரைப்பயணம்:

அதைத்தொடர்ந்து மொட்டை ராஜேந்திரன் வில்லன் பாத்திரத்திலும், காமெடி பாத்திரங்களிலும் தற்பொழுது குணச்சித்திரப் பாத்திரங்களிலும் அசத்தி வருகின்றார். மேலும், இவர் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருந்தபொழுது வில்லன் ஒரு கழிவு வாய்க்காலில் குதிப்பது போன்றதொரு காட்சிக்காக அப்படியே கழிவுநீரில் குதித்துவிட்டாராம். அதன் பின்னர் அவரது உடலிலே தோல்நோய் ஏற்பட்டு அவரது உடலிலிருந்து அத்தனை முடிகளும் கொட்டத்தொடங்கி விட்டனவாம். குரலும் மாறிவிட்டதாம்.

மொட்டை ராஜேந்திரன் ஆக காரணம்:

அதன் பின்னர் இவர் எவ்வளவு மருத்துவம் பார்த்தும் சரி செய்ய முடியவில்லை. கால ஓட்டத்தில் மொட்டை ராஜேந்திரன் மாறிய குரலாலும், உருவ தோற்றத்தினாலுமே அனைவரும் ரசிக்கும் படியாக நடித்து பிரபலமாகியும் விட்டார். அதிலும் நான் கடவுள் படத்திற்கு பின்னர் தான் இவரை பலருக்கும் தெரியும். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார். சமீபகாலமாகவே மொட்டை ராஜேந்திரன் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.

மொட்டை ராஜேந்திரன் அளித்த பேட்டி:

இந்த நிலையில் இது குறித்து அவர் கூறியிருப்பது, கிடைக்கும் வாய்ப்பு அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நடித்ததனால் தான் எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டது என்று நினைக்கிறேன். திறமைக்கு ஏற்ற கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கலாம் என தோன்றுகிறது. ஆரம்ப காலத்தில் நான் டீடியும், பீடியும் தான் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தேன். சினிமாவில் கதாநாயகர்கள், வில்லன்களுக்கு டூப் போட்டு இருந்தேன்.

மொட்டை ராஜேந்திரன் நிலைமை:

அவர்களுக்காக கூவத்தில் பல தடவை விழுந்து புரண்டு இருக்கிறேன். இதனால் முடி இழந்து மொட்டை ராஜேந்திரன் ஆனேன். தற்போது வாய்ப்புகள் தேடி தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அலுவலர்களை தேடித் தேடி சென்று கொண்டிருக்கின்றேன் என்று கூறியிருந்தார். இப்படி இவர் கூறியது சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து மொட்டை ராஜேந்திரனுக்கு இந்த நிலைமையா? என ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full