விஜய் டிவி மௌனராகம் சீரியல் நடிகை வாங்கிய புது கார், இத்தன கோடியா - வைரலாகும் புகைப்படம்
'மௌன ராகம்' சீரியல் நடிகை புது கார் வாங்கியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சிகளில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர் தான் மௌன ராகம். இந்த தொடர் பெங்காலி சீரியலை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் இசை, குடும்பம் கதையை பின்னணியாகக் கொண்ட தொடர்.
இந்த தொடரில் கிருத்திகா, சபிதா, ராஜீவ் மற்றும் சிப்பி ரஞ்சித் ஆகியோர் நடித்து இருந்தார்கள். இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இரண்டாம் பாகம் ஒளிபரப்பி இருந்தார்கள். அதுவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இந்த தொடரில் ஹீரோயின் சக்தியின் அம்மாவாக மல்லிகா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் நடிகை சிப்பி ரஞ்சித். இவர் கேரளாவின் திருவனந்தபுரத்தை பூர்விகமாக கொண்டவர்.
சிப்பி ரஞ்சித் குறித்த தகவல்:
இவர் 1992ம் ஆண்டு வெளியான மலையான படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானார். அதோடு இவர் 90 காலகட்டத்தில் கேரளாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அதன் பின் இவர் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய பல மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருந்தார். இதற்கிடையில் இவர் தயாரிப்பாளர் ரஞ்சித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் இவர் சின்னத்திரைக்கு வந்து விட்டார்.
மௌனராகம் மல்லிகா:
இவர் பெரும்பாலும் மலையாள தொடர்களில் தான் நடித்திருந்தார். இவரை தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த 'மௌன ராகம்' சீரியலின் மூலம் தான். இந்த சீரியலுக்கு பிறகு இவர் எந்த தமிழ் தொடரிலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் நடிகை சிப்பி ரஞ்சித் அவர்கள் புதிதாக கார் வாங்கி இருக்கும் புகைப்படம் தான் தற்போது நேரத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை சிப்பி வாங்கிய புது கார்:
நடிகை சிப்பி அவர்கள் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இதை அவர் தன்னுடைய கணவர் மற்றும் மகளுடன் ஒன்றாக சேர்ந்து வாங்கி இருக்கிறார். தற்போது அதனோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தான் இவர் இணையத்தில் பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவர் தன்னுடைய 23-வது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு இந்த கார் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கார் குறித்த தகவல்:
மேலும், இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார்கள் 90, 110, 130 என்ற மூன்று வெர்ஷனில் விற்பனை செய்யப்படுகிறது. அதில் நடிகை சிப்பி அவர்கள் 110 வெர்சன் வாங்கி இருக்கிறார். இந்த காரின் விலை 1 கோடிக்கும் மேல் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு இந்த காரில் ஏகப்பட்ட சொகுசு வசதிகள் இருக்கிறது. குறிப்பாக, இந்த காரில் 10-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட், 12.3-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஹெட்-அப் டிஸ்பிளே, வயர்லெஸ் போன் சார்ஜர், கனெக்டட் கார் வசதிகள், மெரிடியனின் பிரீமியம் ஸ்பீக்கர் சிஸ்டம், எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் இருக்கைகள் போன்ற பல வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது.