கருணாஸ் பட நடிகைக்கு கொரோனா - அட, இவரும் எம் பியாமே இந்த தொகுதில.

By Rajkumar · 9/8/2020

நாடு முழுவதும் கொரானாவின் தாக்கம் மின்னலைப் போல் பரவிக் கொண்டு வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன், அபிஷேக் பச்சனின் மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆகிய நான்கு பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு நானாவாதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குணமாகி வீடு திரும்பினர்.சமீபத்தில்கூட பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இதையும் பாருங்க : உடலில் சொட்ட சொட்ட மெழுகை உருக்கி ஊற்றி, தோளில் மெழுகு வாதியை ஏற்றி போட்டோ ஷூட் - பயங்கரமான போட்டோ ஷூட் நடத்திய ஜூலி.

அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட காமெடி நடிகரும் முக்குலத்தோர் புலிப்படைகட்சி தலைவரும், எம் எல் ஏவுமான கருணாஸிற்கு கொரோனா தொற்று உறுதி செய்ப்பட்டிருந்தது. இந்த நிலையில் கருணாஸுடன் 'அம்பா சமுத்திரம் அம்பானி' படத்தில் நடித்த நடிகை நவ்னீத் கவுருக்கும் அவரது கணவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மும்பையை சேர்ந்த இவர் அரசாங்கம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய படங்களில் நடித்து வந்த இவர் 2011 ஆம் ஆண்டு அமராவதி, பட்நீரா தொகுதி எம் எல் ஏ வை திருமணம் செய்துகொண்டார். மேலும், அமராவதி தொகுதியில் தன் கணவரும், சுயேட்சை எம்பியுமான ரவி ராணா தொடங்கியுள்ள யுவ ஸ்வபிமானி பக்‌ஷா கட்சி சார்பாக போட்டியிட்டு எம் பியும் ஆனார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full