சாலை விபத்தில் படுகாயமடைந்த வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த எம் பி ராசா.

By S.Dhilip Kumar · 17/8/2023

சாலை விபத்தில் படுகாயமடைந்த வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார் - எம் பி ராசா.திருப்பூரைச்  சேர்ந்தவர் தமிழ் செல்வன். இவர் நேற்று முன் தினம் கோவையில் இருந்து இரு சக்கர வானகத்தில் திருப்பூர்க்கு திரும்பி சென்றுள்ளார். அவிநாசி பகுதியில் சாரலில் சென்று கொண்டிருந்தபோது சுங்கச்சாவடி அருகே முன்னாள் சென்றால் முயன்ற போது தூக்கி வீசப்பட்டார்.

அந்த சமயத்தில் அன்னூர் மற்றும் அவினாசி பகுதியில் நலத்திட்டங்களை வழங்கிவிட்டு விழாவில் கலந்து கொண்ட திமுக துணை பொதுச் செயலாளர் எம் பியுமான ஆராசா சென்னை செல்ல கோவை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். நெடுஞ்சாலையில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா வாலிபரை மீட்டு தனது வாகனத்தில் அழைத்து சென்று தனியார் மருத்துவமனையில் அனுமதி. திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா, தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, அவிநாசியில் இருந்து விமான நிலையம் வந்து கொண்டிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவுடன், திமுக மருத்துவரணி மாநில நிர்வாகி கோகுல் கிருபா சங்கர் உள்ளிட்டவர்கள் பயணித்தனர். அப்போது கனியூர் சுங்கசாவடி அடுத்த நீலம்பூர் மேம்பாலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா காரில் பயணித்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் விபத்து ஏற்பட்டு மயக்க நிலையில்  இருந்தவரை பார்த்தார். உடனடியாக நெடுஞ்சாலை ஓரம் வாகனத்தை நிறுத்திவிட்டு சென்று பார்த்த ஆ. ராசா, காலம் தாழ்த்தாமல் படுகாயமடைந்த வாலிபரை தூக்கி தனது காரில் அவசர சிகிச்சைக்காக அந்த கோவை ராயல்கேர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மயக்கமுற்ற  அந்த இளைஞரை உடன் இருந்து சிறப்பு சிகிச்சையளிக்க, தன்னுடன் பயணித்த மருத்துவர் கோகுல் அவர்களையும் அனுப்பி வைத்ததார். இளைஞருக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சை குறித்து மருத்துவமனைக்கு கைப்பேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார். தனியார் நிறுவன ஊழியரான தமிழ் செல்வன் நெடுஞ்சாலையில் பயணித்திருக்கின்றார். லாரி ஒன்றில் மீது எதிர்பாராத விதமாக வாலிபர் மோதியதனால் இந்த சாலை விபத்து ஏற்பட்டது தெரியவந்தன.  கழுத்தில், கைகளில் காயமடைந்த வாலிபருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை தந்து வருகின்றனர். 

Tamil Behind Talkies AMP · Quick view
View full